பச்சை முட்டையை சாப்பிடலாமா?

31  AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

பச்சை முட்டை 

பச்சை முட்டை சாப்பிடுவதால் நம் உடலுக்கு அதிக சத்துக்கள் கிடைப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால் உண்மையில் அப்படி இல்லை

சத்துக்கள் 

முட்டையில் கால்சியம், வைட்டமின்கள், புரதம் என நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது

அவிடின்

பச்சை முட்டையின் வெள்ளை கருவில் அவிடின் என்ற சத்து உள்ளது. இது பயாடின் உடன் இணையும் போது அது சிறுகுடல் உறிஞ்சுவதை தடுக்கிறது

பயாடின்

முட்டையை வேக வைக்கும் போது அந்த அவிடின் அழிந்துவிடும் காரணத்தினால், நம் உடல் பயாடினை எளிதாக உறிஞ்சுக்கொள்ளும்

சால்மோனல்லா

பச்சை முட்டையில் சால்மோனல்லா என்ற பாக்டீரியா உள்ளது. இது உடலுக்கு நல்லதல்ல

வயிற்றுப்போக்கு 

முட்டையை வேக வைத்து அல்லது சமைத்து சாப்பிடும் போது, சால்மோனல்லாவால் ஏற்படும் வயிற்றுப்போக்கு அல்லது டைபாய்டு வராமல் தடுக்கும்

ஹார்மோன் ஊசி

ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்கப்படும் கோழி மூலம் கிடைக்கும் பச்சை முட்டையில் மருந்தின் தாக்கம் இருக்கும்