2 NOV 2024
Author Name : Aarthi
Pic credit - Pixabay
சியா விதை உடலுக்கு ஆரோக்கியமானது தான். ஆனால் அதிக அளவில் அதனை எடுத்துக்கொண்டால் ஒரு சில பக்கவிளைவுகள் ஏற்படும்
அதிக நார்ச்சத்து இருப்பதால் அதிகப்படியாக எடுத்துக்கொள்ளும் போது ஒரு சில ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதில் சிக்கல் ஏற்படலாம்
அதிகப்படியாக உட்கொள்ளும் போது அதிக கலோரிகள் உட்கொள்வதற்கு சமம். இது நாளடைவில் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்
சியா விதைகள் பொதுவாக நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. அதிகப்படியாக எடுத்துக்கொள்ளும் போது நீர்ச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும்
சியா விதைகள் உடலில் ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது. எனவே ரத்த அழுத்த மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு உகந்தது அல்ல
சியா விதைகளை தண்ணீரில் நன்கு ஊற வைக்காமல் சாப்பிட்டால், அது தொண்டைக்குழியில் செல்லும் போது வீங்கி மூச்சுத்திணறல் ஏறபடக்கூடும்
அதிக நார்ச்சத்து இருப்பதால் வாயு, வீக்கம் மற்றும் செரிமான பிரச்சனைக்கும் வழிவகுக்கும்