23 SEPTEMBER 2024
Pic credit - pixabay
Author Name : Aarthi
நீண்ட நாட்கள் பாட்டிலில் தண்ணீர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதால் சுவை மாறுப்படுவதோடு, உடல்நலக்கேடுகளை விளைவிக்கும்
முறையற்ற நீர் சேமிப்பு பாக்டீரியா வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதால் இரைப்பை குடல் தொற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்.
பேக்கேஜ் செய்யப்பட்ட ஒரு சில தண்ணீரில் செயற்கை ரசாயனங்கள் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யப்படுவதால் இது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்
பாட்டில் தண்ணீர் அதிகப்படியாக வடிகட்டப்படுவதால் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் நீக்கப்படுகிறது.
நீண்ட நாட்கள் பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும் தண்ணீரில் மைக்ரோ பிளாஸ்டிக் கலப்பதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது
ஒரு சில பேக்கேஜ் தண்ணீர் மீண்டும் மீண்டும் ஒரே பாட்டிலில் பயன்படுத்தப்படுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானது
பேக்கேஜ் தண்ணீரை அடிக்கடி வாங்கி குடிப்பதை தவிர்த்து விட்டு வெளியே செல்லும் போது வீட்டில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வது சிறந்தது.