4 NOV 2024
Author Name : Aarthi
Pic credit - Pixabay
நம்மில் பலருக்கும் இரவு தாமதமாக தூங்கி காலை சீக்கிரம் எழுந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் ஒரு சில பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்
இரவு நேரம் சரியாக தூங்காமல் இருந்தால் உடலில் கார்டிசால் எனும் மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க தூக்கம் மிகவும் அவசியம், தூக்கம் இல்லை என்றால் நோய் தொற்று அடிக்கடி வரும்
தூக்கம் சரியாக இல்லை என்றால் மூளையின் செயல்பாடு குறையும். இதனால் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படும்
நல்ல தூக்கம் இல்லை என்றால் ஞாபக மறதி ஏற்படக்கூடும். தினசரி செயல்பாடுகள் கூட சிக்கலாக இருக்கும்
தூக்கத்தின் தரம் சரியாக இல்லை என்றால் உடலில் ஹார்மோன் சமநிலையில் சுரக்காது. இதனால் உடலில் பல பிரச்சனைகள் வரும்
சரியான தூக்கம் இல்லாவிட்டால், உடல் எடை அதிகரித்து உடல் பருமனுக்கு வழிவகுக்கும்