20  NOV  2024

தூக்கமின்மையால் வரும் இதய பிரச்சனை..

Author Name : Aarthi

Pic credit - Pixabay

தூக்கம்

தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது, அது நம் உடல் இயக்கத்திற்கு நேரடி தொடர்புள்ளது. குறைந்தது 7-8 மணி நேரம் தூங்கவேண்டும்

தூக்கமின்மை

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இது இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது

அழற்சி

சரியான தூக்கம் இல்லை என்றால் இதயத்தில் இருக்கும் ரத்த குழாயில் அழற்சி பன்புகள் அதிகரித்து அடைப்பு ஏற்படக்கூடும்

ரத்த அழுத்தம்

முறையான தூக்கம் இல்லை என்றால் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்

மாரடைப்பு

தூக்கமின்மை ரத்த குழாயில் கொழுப்புகளை படிய வைத்து மாரடைப்புக்கு வழிவகுக்கும்

பிளாக்

கரோனரி தமனிகளில் பிளாக் ஏற்படுவதற்கான அபாயத்தை தடுக்க வேண்டும் என்றால் இரவில் நல்ல தூக்கம் அவசியம்

இதய ஆரோக்கியம்

இரவில் நல்ல தூக்கம் என்பது உடலில் ரத்த அழுத்தத்தை 20% வரை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்