9 NOV  2024

மகப்பேறு பின் ஏற்படும் மன அழுத்தத்தின் அறிகுறிகள்

Author Name : Aarthi

Pic credit - Pixabay

மன அழுத்தம்

மகப்பேறுக்கு பின் ஒரு பெண்ணின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் இது மன அழுத்தமாக மாறும். இதனை கண்டிப்பாக கவனிக்க வேண்டும்

சோர்வு

பெரும்பாலான நேரம் சோர்வாகவும், சோகமாகவும், தன்நம்பிக்கை இல்லாமல் இருப்பது இதற்கான முக்கிய அறிகுறிகளாகும்

மனநிலை மாற்றம்

தீவிர மனநிலை மாற்றம் காரணமின்றி அழுவது, கோபமடைவது அல்லது எரிச்சலாக உணர்வது மற்றொரு அறிகுறியாகும்

எரிச்சல்

குறிப்பாக, தான் பெற்றெடுத்த குழந்தை மீது முழுமையான அன்பு செலுத்த முடியாமல் எரிச்சலடைவது போன்றவை தீவிர அறிகுறிகளாகும்

ஹார்மோன்

இதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் போதிய ஓய்வு, தூக்கம் இல்லாமல் இருப்பதுதான்

மருத்துவ ஆலோசனை

இதனை கவனிக்காமல் இருக்க கூடாது, நிச்சயம் மருத்துவ ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்

ஓய்வு

குடும்பத்தில் இருக்கும் நபர்கள் இந்த நிலமையை புரிந்துக்கொண்டு, அந்த பெண்ணிற்கு நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும்