24 JULY 2024
Pic credit - Unsplash
Umabarkavi
வருமான வரி ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய ஒன்று. ஆனால், இதில் சில முதலீடுகள், செலவுகள் மூலம் வரி செலுத்துவோரின் வரிச்சுமையை குறைக்க உதவும்
இதில் பிரபலமான பிரிவு Section 80C-ஐ தவிர வரியை சேமிக்க உதவும் பிற பிரிவுகளும் உள்ளன. அது என்னென்ன என்பதை பார்ப்போம்
Section 89D மூலம் மனைவி, குழந்தைகளுக்கான உடல்நலக் காப்பீட்டு பிரீமியம்களுக்காக ரூ.25,000 வரை விலக்கு பெறலாம்
Section 89DD பிரிவில் 80% வரை மாற்றுத்திறனாளிகள் வரி விலக்காக ரூ.75,000 மற்றும் கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.25 லட்சம் வரை விலக்கு பெறலாம்
Section 80E பிரிவில் உயர்கல்விக்கான கடனுக்கான வட்டிக்கு வரம்பு விலக்கு அளிக்கப்படுகிறது.
Section 80EE பிரிவில் வரி செலுத்துவோர் வீட்டுக் கடன்களுக்கான வட்டிக்கு ரூ.50,000 வரை விலக்கு பெறலாம்
Section 80TTA வங்கிகள், தபால் அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.10,000 வரை விலக்கு பெற முடியும்