28 NOV 2024
Author Name : Aarthi
Pic credit - Pixabay
ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சிறந்த ஆக்ஸிஜனேற்றி ஆகும். இது மூளையின் செல்கள் சிதையாமல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்
மஞ்சளில் இருக்கும் குர்குமின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது. இது மனநிலையை மேம்படுத்துவதோடு, மூளையில் புதிய செல்களை உருவாக்க உதவும்
நட்ஸில் இருக்கும் வைட்டமின் ஈ, மூளையின் சவ்வுகள் ஃப்ரீ ரேடிகள் சேதத்தில் இருந்து தடுக்க உதவுவதோடு, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும்
ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த மீன்கள் மூளையின் செயல்பாடு மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும் சிறந்த உணவாகும்
ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்து இருக்கும் ப்ளூபெர்ரி ஆக்ஸிஜனேற்ற அழுத்த மற்றும் வீக்கத்தில் இருந்து மூளையை பாதுகாக்கும்
முட்டையில் இருக்கும் கோலின் மனநிலை மற்றும் நினைவாற்றலை கட்டுப்படுத்தி செயல்பாட்டை மேம்படுத்தும்
பூசணி விதையில் இருக்கும் துத்தநாகம் மூளையில் இருக்கும் நரம்பியல் சமிக்ஞைக்கு இன்றியமையாததாகும்.