15 OCT 2024

கருவுற்ற காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்..

Author Name : Aarthi

Pic credit - Pixabay

ஊட்டச்சத்து

ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு மிக முக்கியமானது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தான். அதிலும் சில பழ வகைகள் கருவுற்ற பெண்களுக்கு உகந்தது

வைட்டமின்கள்

பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது. இது கர்ப்பக்காலம் முழுவதிலும் சாப்பிடலாம்

ஆப்பிள்

நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள் செரிமானத்தை ஊக்குவிக்கும். மேலும் கர்ப்பக்காலத்தில் பொதுவான பிரச்சனையான மலச்சிக்கலை சரி செய்யும்

மாம்பழம்

மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. இது குழந்தையின் தோல், கண்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சிக்கு முக்கியமானது

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது. இது கால் பிடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்க உதவும்

பெர்ரி

பெர்ரி வகைகளில் ஆண்டி ஆக்ஸிடென்ஸ் நிறைந்துள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்

அவகேடோ

அவகேடோவில் போலேட் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது கருவின் முழுமையான வளர்ச்சிக்கு முக்கியமான ஆதரமாகும்