22 OCT 2024

இதய நோய்க்கான முக்கிய அறிகுறிகள் என்ன?

Author Name : Aarthi

Pic credit - Pixabay

இதயம்

இதயம் உடலில் இருக்கும் முக்கியமான உருப்புகளில் ஒன்றாகும். சமீப காலமாக பலருக்கும் பல்வேறு காரணங்களால் இதய நோய் ஏற்படுகிறது

வலி

இடது கை முழுவதும் ஒரு விதமான வலி ஏற்படுவது இதய நோய்க்கான அறிகுறியாகும்

தொண்டை வலி 

மார்பு வலி கழுத்து அல்லது தொண்டை வரை பரவி வலி ஏற்படுத்தினால் உடனடியாக மருத்துவரை அனுக வேண்டும்

படபடப்பு

அவ்வப்போது இதய படபடப்பு ஏற்படுவது சாதாரண ஒன்று தான். ஆனால் அந்த படபடப்பு நீடித்தால் அல்லது மோசமானால் மருத்துவ உதவி பெற வேண்டும்

மார்பு வலி

மாரடைப்பு பொதுவாத மார்பு வலி, இறுக்கம், அழுத்தம் போன்றவற்றால் ஏற்படும். இந்த அறிகுறிகள் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்

வியர்வை

காரணமின்றி அதிகப்படியாக வியர்வை வெளியேறுவது மாரடைப்பின் ஒரு வகையான அறிகுறியாகும்

குமட்டல்

குமட்டல், நெஞ்செரிச்சல், வாந்தி ஆகிய அறிகுறிகள் தொடர்வது மாரடைப்பின் அறிகுறியாகும். இது பெண்களிடம் அதிகமாக காணப்படுகிறது