தாய்ப்பால் அதிகம் சுரக்க இதை பாலோ பண்ணுங்க..

19 AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

தாய்ப்பால் 

பிறந்த குழந்தைக்கு முழு முதல் உணவு என்பது தாய்ப்பால் தான். குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தாய்ப்பால் மூலம் கிடைக்கும்

சத்து குறைபாடு 

ஒரு சில தாய்மார்களுக்கு சத்து குறைபாடு காரணமாக தாய்ப்பால் சுரப்பதில் சிக்கல் இருக்கும்

வீட்டு உணவு 

தாய்ப்பால் சுரக்க வீட்டிலேயே சில உணவுகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டாலே நல்ல மாற்றம் இருக்கும்

நூல்கோல் 

நூல்கோலை வாரத்திற்கு 3 முறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும், இதில் இருக்கும் சில சத்துக்கள் தாய்ப்பால் சுரக்க அதிகரிக்கும்

மரவள்ளிக்கிழங்கு 

தாய்ப்பால் சுரப்பதில் சிக்கல் இருப்பவர்கள் மரவள்ளிக்கிழங்கை எடுத்துக்கொள்ளலாம். இது தாய்ப்பால் சுரப்பிற்கு அருமருந்தாகும்

ஒரு தலை பூண்டு 

சாதாரண பூண்டை விட ஒரு தலை பூண்டை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் குறைபாடே இருக்காது

கீரை வகைகள் 

அவரைக்காய், மிளகு, ஜீரகம், கீரை வகைகளை வாரத்திற்கு மூன்று முறையாவது நிச்சயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்