நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

25 JULY 2023

Pic credit - pixabay

செல்போன்

தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் நம் செல்போன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

இரவு உணவு

முக்கியமாக இரவு உணவு 8.30 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்வதன் மூலம் செரிமானம் சீராகி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்

மூச்சு

தூங்கும் முன் மூச்சை வேகமாக விடுவதை தவிர்த்து மெதுவாக விட முயற்சி செய்யுங்கள் அப்படி செய்வதால் மூளை அமைதியாக இருக்கும்

தூக்க சுழற்சி

தினமும் ஒரே நேரத்தில் தூங்குவதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும் அதேபோல் காலையிலும் ஒரே நேரத்தில் முழிக்க வேண்டும்

குளியல்

வெளியில் வேலை செய்து வருபவர்கள் படுக்கைக்கு செல்லும் முன் சூடான நீரில் குளித்துவிட்டு செல்லலாம்

துரித உணவு 

இரவில் காரமான அல்லது துரித உணவை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் அது நல்ல தூக்கத்திற்கு எதிர்மறையானது

உணவு வகை 

பூசணி விதை, சூடான பால் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்