நாள்தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடலாம்..காரணம்  இதுதான்!

30 April 2024

நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துகள் உள்ளன. இயற்கை மருத்துவங்களுக்கு நெல்லிக்காய் பயன்படுகிறது

வைரஸ் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும். வேறு எந்த பழங்களிலும் இல்லாத  அளவில் இதில், வைட்டமின் சி மிக அதிகம்

இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே, செரிமானத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலை தடுக்கிறது.

மேலும் அசிடிட்டி, அல்சர் போன்றவற்றை விரட்டி, உடலிலுள்ள செரிமான மண்டலத்தை இயக்க வைக்கிறது.

பச்சை காயாக சாப்பிடும்போது தான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாக கிடைக்கும். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது 2 நெல்லிக்காய் சாப்பிடலாம்

உடல் எடையை குறைக்க உதவும். கெட்ட கொழுப்புகளை உடலில் இருந்து வெளியேற்றும் தன்மை கொண்டது.

ஒரு சிலருக்கு நெல்லிக்காய் அதிகம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு பிரச்னைகள் வரலாம் என்பதால் அளவுடன் சாப்பிடுவது நல்லது

Next: உடலுக்கு எனர்ஜி கிடைக்க காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!