12 November 2024
Pic credit - freepik
Author : Mukesh
சாப்பிட சரியான நேரம் என்பது உங்கள் வாழ்க்கைமுறையை சார்ந்துள்ளது.
சிறந்த ஆரோக்கிய நலன்களுக்காக தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை இரவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சனைகளை தடுக்க படுக்கைக்கு குறைந்தது 3 மணிநேரத்திற்கு முன் இரவு உணவை சாப்பிட முயற்சிக்கவும்.
நாள் முழுவதும் சிறிய அளவிலான உணவை தொடர்ந்து சாப்பிடுவது மிக முக்கியம். ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது செரிமான பிரச்சனையை அதிகரிக்கும்.
ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற செரிமான பிரச்சனை உள்ளவர்கள் மாலையில் சீக்கிரம் இரவு உணவை எடுத்துக்கொள்ளலாம்.
இரவுநேரத்தில் திடீரென பசி எடுத்தால் சாப்பிடுவது சிறந்ததுதான்.
இட்லி போன்ற லேசான ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுக்கவும். வறுத்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.