19 November 2024
Pic credit - freepik
Mukesh Kannan
உடலில் முக்கியமாக பகுதிகளில் சிறுநீரகங்களும் ஒன்று. அந்தவகையில், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியம்.
தினமும் நிறைய தண்ணீர் குடிப்பது இரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றும்.
அதிக தண்ணீர் குடிப்பது சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.
மருத்துவர் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ள கூடாது. அதிகளவில் வலி நிவாரணிகளை உட்கொள்வது சிறுநீரகத்தை பாதிக்க செய்யும்.
சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துகொள்வது முக்கியம்.
வறுத்த மற்றும் துரித உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது சிறுநீரகத்திற்கு நல்லது.
மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கங்கள் சிறுநீரகத்தை மோசமாக பாதிக்கும்.