02 August 2024
Umabarkavi
Pic credit - Unsplash
அன்றாட வாழ்வில் களைப்பு அடையாமல் புத்துணர்ச்சியுடன் வேலை செய்வதற்கு ஸ்டாமினா கட்டாயம் தேவைப்படுகிறது
அத்தகையை ஸ்டாமினாவை அதிகரிக்க என்னெல்லாம் சாப்பிடலாம் என்பதை பார்ப்போம்
முட்டையில் புரதம் நிறைந்துள்ளது. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் தசை வளர்ச்சியை அதிகரிக்கலாம்
கீரையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. வாரத்தில் 3 நாட்களாவது கீரை உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இதுவும் ஸ்டெமினாவை அதிகரிக்கும்
நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். இதனை காலை உணவாக சாப்பிடுவது நல்லது
வாழைப்பழத்தில் பொட்டாசியம், கார்போ ஹைட்ரேட், வைட்டமின் பி6 ஆகியவை உள்ளன. இவை உடலுக்கான ஸ்டமினாவை அதிகரிக்கும்
நீர்ச்சத்து அதிகமுள்ள தர்பூசணியை சாப்பிட்டால் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், தசைகளின் சோர்வைத் தடுக்கவும் செய்கிறது.