11 DEC 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
காய்கறி வகைகளில் அதிக நீர் சத்து நிறைந்த காயாக முள்ளங்கி உள்ளது. அதை சாப்பிடுவதால் பலவேறு சத்துக்கள் கிடைக்கும்.
முள்ளங்கியில் பல்வேறு சத்துக்கள் நிறைந்திருந்தாலும், முள்ளங்கி மிகவும் குளிர்ச்சியான உணவு, அதை குளிர்காலத்தில் சாப்பிட கூடாத என்று கருத்து உள்ளது.
உணமையாகவே குளிர்காலத்தில் முள்ளங்கி சாப்பிடக்கூடாதா, அவ்வாறு சாப்பிட்டால் என்ன ஆகும் என்பது குறித்து பார்க்கலாம்.
முள்ளங்கியில் உள்ள ஆரோக்கிய உணவுகள் அவற்றை குளிர் காலத்திற்கு ஏற்ற உணவாக மாற்றுகிறது. சொல்லப்போனால், குளிர் காலத்தில் தான் அதிக அளவு முள்ளங்கி கிடைக்கும்.
முள்ளங்கி நீர் சார்ந்த நோய் என்பதால் உடலில் ஏற்படும் நீர் தொடர்பான நோய்களை சரிசெய்ய உதவுகிறது.
முள்ளங்கியில் கால்சியம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, புரதம் உள்ளிட்ட சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
முள்ளங்கி உடலை வலுப்படுத்தவும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
முள்ளங்கி செரிமானத்திற்கு உதவும் ஒரு சிறந்த உணவாக உள்ளது. எனவே, செரிமான பிரச்னைகள் உள்ளவர்கள் அதிக அளவு முள்ளங்கியை சாப்பிடலாம்.
முள்ளங்கி சாப்பிடுவதால் சர்ச்சரை நோய் கட்டுக்குள் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே, சர்ச்சகரை நோய் உள்ளவர்கள் அதிக அளவு முள்ளங்கியை சாப்பிடலாம்.