05 NOV 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் புகைப்படங்களின் நம்பகத்தன்மையை சோதிக்கும் வகையில், புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் இருந்தே அந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மையை அறிந்துக்கொள்ளலாம்.
வாட்ஸ் அப்பின் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த, பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் சேட்டில் புகைப்படத்தை ஓப்பன் செய்ய வேண்டும்.
அப்போது புகைப்படத்திற்கு மேலே தோன்றும் 3 புள்ளிகளை கிளிக் செய்து, "Search on web" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும்போது அந்த புகைப்படம் உண்மையானதா அல்லது தொழில்நுட்ப உதவியுடன் சித்தரிகப்பட்டதா என்ற தகவல் கிடைக்கும்.
இதன் மூலம் போலி தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பரவுவது தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.