09 October 2024
Pic credit - Freepik
Author : Mukesh
ஆலிவ் எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து HDL கொழுப்பை அதிகரிக்கிறது.
கடுகு எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இது இதயத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது.
எள் எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இது நல்லது.
கடலை எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது. இது ஒரு இயற்கை ஆக்ஸிஜனேற்றியாகும்.
சூரியகாந்தி எண்ணெயில் வைட்டமின்-ஈ மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இது எலும்புகளை வலுவாக்கும்.
எந்த எண்ணெயை பயன்படுத்தினால் குறைந்த அளவே பயன்படுத்தி பழகி கொள்ளுங்கள். இதுவே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.