சமையலுக்கு இந்த எண்ணெய் பயன்படுத்துங்க

22 August 2023

Author : Umabarkavi

Pic credit  - Unsplash

    இதய பிரச்னை

இன்றைய காலத்தில் அனைவருக்கும் கொலஸ்ட்ராலால் பாதிப்புள்ளது. இதனால் இதய பிரச்னைகள் அதிகரிக்கிறது

    கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். குறிப்பாக கடைகளில் விற்கப்படும் எண்ணெய்களை சாப்பிடவே கூடாது

       எண்ணெய்

இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்

  நல்லெண்ணெய்

சமையலுக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கும்

     சூரியகாந்தி

சூரியகாந்தி எண்ணெயையும் பயன்படுத்தலாம். கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது

     சோயா பீன்

சோயாபீன் எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நோய் அபாயத்தையும் தடுக்கும்

     ஆளிவிதை

சமையலுக்கு ஆளிவிதை எண்ணெய் பயன்படுத்தலாம். இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது