03 December 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
மாளவிகா மோகனன் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.
இவரது தந்தை யூ.கே மோகனன் பாலிவுட் படங்களின் பிரபல ஒளிப்பதிவாளர். தாய் பீனா மோகனன்.
பள்ளிக் கல்லூரிப் படிப்பையெல்லாம் மும்பையில்தான் முடித்துள்ளார். தற்போது குடும்பத்துடன் பூர்வீகமான கேரளாவின் பையூரில் வசித்து வருகிறார்.
மலையாள சினிமாவில் 2013-ம் ஆண்டில் வெளியான "பட்டம் போலெ" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகை மாளவிகா மோகனன்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
சமீபத்தில் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான விக்ரமின் தங்கலான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் மாளவிகா மோகனன்.
தனக்கு நடிகர் பிரபாஸை மிகவும் பிடிக்கும் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.