யார் இளநீர் சாப்பிடக்கூடாது.. ஏன்?

30 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

எலக்ட்ரோலைட்

இளநீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் எலக்ட்ரோலைட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. குறைந்த கலோரிகள் கொண்டது

நன்மைகள்

தேங்காய் தண்ணீரில் ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், ஒரு சிலர் இதனை எடுத்துக்கொள்ள கூடாது

சர்க்கரை

இளநீரில் இயற்கையான சர்க்கரை இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் போது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்

குடல் பிரச்சனை

குடல் பிரச்சனை இருப்பவர்கள் இளநீர் எடுத்துக்கொள்ளும் போது அதில் இருக்கும் ஒருசில சத்துக்கள் இதனை அதிகப்படுத்தும்

அழற்சி

ஒரு சிலருக்கு தேங்காய் சாப்பிட்டால் அழற்சி ஏற்படும். அப்படி அழற்சி இருப்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்

பொட்டாசியம்

இளநீரில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இதனை எடுத்துக்கொள்ள கூடாது

ஊட்டச்சத்து

தேங்காய் தண்ணீர் ரத்த அழுத்தத்தை குறைக்கும், ரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள் இதனை எடுத்துகொள்ளக் கூடாது.