23 May 2024
ரயிலில் பயணிக்கும்போது தண்டவாளத்திற்கு இடையில் கற்கள் எதற்காக கொட்டப்படுகின்றன என்று நாம் யோசித்திருக்கிறோமா? அந்த டவுட்டை இங்கு பார்ப்போம்
தண்டவாளத்தில் இருக்கும் கற்களுக்கு டிரக் ப்ளாஸ்ட் என்று பெயர். இவற்றை பயன்படுத்துவதற்கு பல காரணங்கள் உள்ளன. இவை ரயில் தடங்களை சரியான இடததில் நிலைத்து நிற்க உதவுகிறது
அதாவது, ரயில் பயணிக்கும்போது ஏற்படும் அதிர்வினால் ரயில்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து விடக் கூடாது
இந்த முக்கிய காரணத்திற்காகவே டிராக்குகளின் இடையில் கற்கள் கொட்டப்படுகின்றன. இவை தண்டவாளங்களை இறுக்கமாக பிடித்து நகரால் பார்த்துக் கொள்ளும்
மேலும் தண்டவாளத்தில் தாவரங்கள் வளர்வதையும் இந்த ஜல்லி கற்களை தடுக்கின்றன. தண்ணீர் முழுமையாக தேங்காததாலும் சிறு செடிகள் முளைப்பதில்லை
ஜல்லி கற்கள் தண்ணீரை தேங்க வைக்க விடாமல் வழிந்தோட செய்வதால் தண்டவாளங்கள் தண்ணீரால் அரிக்கப்படுவதை தடுக்கின்றன.
அனைத்து கற்களையும் தண்டவாளங்களில் பயன்படுத்த முடியாது. கற்கள் கரடுமுரடாகவும், கூர்மையானதாகவும் கொண்டிருக்க வேண்டும். இதனை பராமரிப்பதற்காகவே தனி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.