27 November 2024
Pic credit - freepik
Mukesh Kannan
புரதம் நம் உடலுக்கு இன்றியமையாத அங்கமாகும். நமது உடல் வளர்ச்சிக்கு புரதம் இன்றியமையாதது.
புரத குறைபாடு உடலின் பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே, அதன் குறைபாட்டின் அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம்.
புரதம் முடி, தோல் மற்றும் உடலின் ஒவ்வொரு பகுதியையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
உடலில் புரதச்சத்து குறைவாக இருந்தால், முடி உதிர்தல், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, சோர்வு மற்றும் சரும பிரச்சனைகளை உண்டாக்கும்.
உங்கள் தினசரி உணவில் 15 முதல் 30 கிராம் புரதத்தை சேர்த்துக்கொள்ளுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உங்கள் புரத குறைபாட்டை ஈடுசெய்ய பால், முட்டை மற்றும் தானியங்களை எடுத்து கொள்ளலாம்.
உடலில் புரதச்சத்து குறைவாக இருப்பதால் எலும்புகள் பலவீனமடைந்து, கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளை ஏற்படும்.