22 NOV 2024
Author Name : Mohamed Muzammil S
Pic Credit - Pinterest
சிங்கப்பூர் பாஸ்போர்ட் உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளில் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பேய் ஆகிய நாடுகள் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதன் மூலம் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்
ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென்கொரியா, சுவீடன் ஆகிய நாடுகள் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இதன் மூலம் 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
நான்காம் இடத்தில் பெல்ஜியம், டென்மார்க், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் ஆகிய நாடுகள் உள்ளன. இதன் மூலம் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.
ஆஸ்திரேலியா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் ஐந்தாம் இடத்தில் இதன் மூலம் 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
தரவரிசையில் ஆறாம் இடத்தில் கிரீஸ் மற்றும் போலாது ஆகிய நாடுகள் உள்ளது. இதன் மூலம் 188 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.
கனடா, செக்கியா, ஹங்கேரி, மால்டா ஆகிய நாடுகள் ஏழாம் இடத்தில் உள்ளது. இதன் மூலம் 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்
இந்தியா இந்த தரவரிசையில் 82 ஆம் இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலம் 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.