யோகா செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

04 July 2024

Pic Credit: Unsplash

யோகாசனம்

யோகாசனங்களை செய்வதன் மூலம் உடல் சார்ந்த, மனம் சார்ந்த பிரச்னைகள் தவிர்க்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்

உணவுகள்

யோகாசனங்களை செய்யும்போது கவனமாக செய்ய வேண்டும். யோகா செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கலாம்

பழச்சாறு

யோகா செய்வதற்கு முன் வாழைப்பழம், பழ ஸ்மூத்தி, ஆப்பிள், நட்ஸ், தயிர் போன்றவை சாப்பிடலாம்

உணவு இடைவெளி

யோகாசனங்களை செய்யும்போது வெறும் வயிற்றில் செய்வது அதாவது சாப்பிட்டு இருமணி நேரங்கள் கழித்து செய்ய வேண்டும்

ஆசனம்

எந்த யோகாசனம் செய்தாலும் உங்கள் கவனம் மூச்சுக்காற்றின் மேல் இருப்பது சிறப்பு. முன்னோக்கி வளையும் ஆசனத்தை செய்த பின், பின்னோக்கி வளைவதற்கான ஆசனம் செய்வது அவசியம்

ஆசனம் முறை

யோகாசனம், உடற்பயிற்சி செய்யும்போது முன்னோக்கி நீங்கள் ஒருமுறை குனிந்தால் பின்னோக்கி மறுமுறை வளைந்து சக்தியை சமன் செய்ய வேண்டும்

பயிற்சியாளர்

சரியான பயிற்சியாளரைச் கண்டறிந்து யோகா பயிற்சி பெறவும். பயிற்சியாளரின் துணையில்லாமல் யோகாவை முயற்சி செய்ய வேண்டாம்