30 SEP 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் சுமார் 120 கலோரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே எண்ணெய் இல்லாமல் சமைத்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடை சமநிலையில் இருக்கும்.
விலங்குகளிடம் இருந்து பெறப்படும் எண்ணெய் மற்றும் நெய்யில் சாச்சுரேடட் மற்றும் டிரான்ஸ் ஃபேட் அதிகள் இருக்கும்.
அவை இதய நாளங்களில் அடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்த கூடும்.
காய்கறி மற்றும் தானிய வகைகளில் எண்ணெய் சேர்க்காமல் சமைப்பது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் பாதுகாக்க உதவும்.
எண்ணெயை தவிர்க்கும் பட்சத்தில் தண்ணீர் வைத்து வேக வைத்து உணவுகளை சாப்பிடலாம்.
எண்ணெய் பயன்படுத்தாமல் தண்ணீர் பயன்படுத்தி சமைக்கும்போது உணவில் இருக்கு ஊட்டச்சத்து முழுமையாக உடலுக்கு சென்று சேறும்.
அதுமட்டுமன்றி உணவில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் முழுமையாக உரிஞ்சப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.