நீங்கள் சாப்பிட்டவுடன் இதெல்லாம் செய்யவேக் கூடாது..!

14 August 2024

Pic credit - tv9

Author : Mukesh 

         நோய்கள்

சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத விஷயங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். இது பல நோய்கள் வர முக்கிய காரணமாக அமையும்.

        அஜீரணம்

சாப்பிட்டவுடன் தண்ணீரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜீரணநீர் தீர்ந்து போய் அஜீரணமாகும்.

            தாகம்

சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர் தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டும்.

           ஜீரணம்

சாப்பிட்டதும் உடனே படுத்து விடக்கூடாது. காரணம், குடல் செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையாக நடக்காது.

             ஓய்வு

குறைந்தது ஒரு மணி நேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும்.

            குளியல்

சாப்பிட்டதும் குளிக்க கூடாது குறைந்தது 2 மணி நேரம் கழித்தே குளிக்க வேண்டும். குளிப்பதும் ஜீரணம் ஆவதை தாமதிக்கும்.