18 OCT 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
பப்பாளி பழத்தில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் பப்பாளி பழத்துடன் சில உணவு வகைகளை சேர்த்து சாப்பிடக்கூடாது.
பப்பாளி பழத்துடன் சிட்ரஸ் பழங்களை சேர்த்து சாப்பிடும் பட்சத்தில் நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி உண்டாக வாய்ப்புள்ளது.
பப்பாளி பழத்துடன் புரத சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளை சாப்பிடும்போது செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
பப்பாளி உடன் நொதித்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் வயிறு வீக்கம், வயிற்றுப் பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
பப்பாளி பழத்துடன் காரமான உணவு வகைகளை சேர்த்து சாப்பிட்டால் வயிற்று எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
பப்பாளி உடன் கொழுப்பு நிறைந்த உணவுகளை சேர்த்து சாப்பிடும்போது அஜீரணம் மற்றும் வயிற்று வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே முன்பு குறிப்பிட்ட உணவு வகைகளுடன் பப்பாளி பழத்தை சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.