30 SEP 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
இந்த நவீன உலகில் ஸ்மார்ட்போன் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஆனால் அத்தகைய முக்கிய கருவியே உடலுக்கு ஆபத்தாக அமையலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்மார்ட்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதன் மூலம் உடலின் இயக்கம் குறைந்துவிடுகிறது.
அவ்வாறு இயக்கம் இன்றி இருப்பதன் மூலம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
அசைவின்றி மொபைல் போனை பயன்படுத்துவதன் மூலம் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது மற்றும் கொழுப்பு அளவு அதிகரிப்பதன் மூலம் இதயம் சரியாக செயல்படாமல் போக வாய்ப்பு உள்ளது.
இரவில் அதிக நேரம் தூங்காமல் மொபைல் பயன்படுத்துவதன் மூல தூக்கமின்மை ஏற்படுகிறது. இது, ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய நோய்களை ஏற்படுத்துகிறது.
அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதன் மூலம் கழுத்து மற்றும் தோள்பட்டையில் ரத்த ஓட்டம் தடைபடும். இது இதயத்தின் செயல்பாட்டை பாதிக்க வாய்ப்புள்ளது.