30 SEP 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
காபி குடிப்பதால் உடலில் எவ்வளவு நன்மைகள் ஏற்படுமோ அதே அளவுக்கு தீமையும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
காபி மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டி, நமக்கிருக்கும் கவலையை அதிகரிக்கும்.
காபி குடிப்பதால் மனதில் பதட்டம், அமைதியின்மை போன் ற உணர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிக அளவு காபி குடிப்பது உடலில் கார்டிசோல் என்ற மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோனின் அளவை அதிகரிக்கும்.
அவ்வாறு உடலில் கார்டிசோல் அதிகரிக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த மன ஆரோக்கியமும் பாதிக்கும்.
காபியை அதிக அளவு உட்கொள்வதால் உடலில் எரிச்சல் மற்றும் நடுக்கம் போன்றவை ஏற்படும்.
காபியில் உள்ள காஃபின் அடினோசின் தூக்கத்தை தடுக்கும் திறன் கொண்டது. இது தூக்கத்தை பாதிக்கிறது.