வயதாகும்போது சருமத்தில் ஏற்பட கூடிய மாற்றங்கள் என்ன என்ன?

30 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

மாற்றங்கள்

மனிதர்களுக்கு வயதாகும்போது உடலிலும் சில மாற்றங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக தோல் சார்ந்த மாற்றங்கள் அதிகம் ஏற்படும். 

பொலிவு மங்கும்

முகத்தில் பொலிவு மங்கி, சுருக்கங்கள் தோன்றி, சருமம் அதன் இறுக்கத்தை இழக்கும். 

சுருக்கம்

வயதாகும் போது சருமத்தில் கொலாஜன் உள்ளிட்ட புரதங்கள் குறைய ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக சருமம் சுருக்கமடைந்து, தளர்ச்சியுடன் தோன்றுகிறது.

கழுத்து

கொலாஜன் மற்றும் எலாஸ்டிக் குறைபாடு காரணமாக வயதானதும் சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுகிறது. குறிப்பாக முகம், கழுத்து மற்றும் கை பகுதியில் அதிகமாகத் தெரியும்.

மரபணு மாற்றம்

அதிகப்படியான சூரிய ஒளி, வயது மற்றும் மரபணு மாற்றம் காரணமாக சருமத்தில் கருப்பு புள்ளிகள் தோன்றும். 

வறண்ட சருமம்

வயதாகும்போது சருமம் ஈரப்பதத்தை தக்க வைக்கும் திறனை இழக்கிறது. இதனால் சருமம் வறண்டு செதில்களாக உறிகிறது. 

தளர்ச்சி

கொலாஜன் மற்றும் எலாஸ்டின் குறைபாடு காரணமாக சருமம் தளர்ச்சியடைந்து இறுக்கத்தை இழக்கிறது. 

மேலும் படிக்க