18 OCT 2024

அசத்தலான புதிய அம்சங்களை அறிமுகம் செய்த யூடியூப்!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

யூடியூப்

உலகின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப், தனது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல சிறப்பு அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. 

20 அம்சங்கள்

செயற்கை நுண்ணறிவு, ஸ்லீப் டைமர், மினி பிளேயர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் முக்கிய 4 அம்சங்கள் குறித்து பார்க்கலாம். 

ஸ்லீப் டைமர்

யூடியூப் ஸ்லீப் டைமர் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வீடியோவை பிளே செய்த உடன் எத்தனை நிமிடங்களில் நிற்க வேண்டும் என்பதை நாமே செட் செய்துக்கொள்ளலாம். 

மினி பிளேயர்

வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும்போதே வேறு ஏதேனும் வேலைகள் செய்ய வாய்ப்புள்ளது. ஏதேனும் குறுஞ்செய்திகள் அல்லது போன் கால்கள் வரலாம்.

சிறப்பு பயன்பாடு

எனவே மேம்படுத்தப்பட்ட மினி பிளேயர் அம்சத்தை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் யூடியூப் பார்த்துக்கொண்டே மற்ற வேலைகளையும் செய்யலாம். 

செயற்கை நுண்ணறிவு

யூடியூபில் பிளே லிஸ்ட் உருவாக்கிக்கொள்ளும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பிடித்த தீம்களில் பிளே லிஸ்டை உருவாக்கி பயன்படுத்தலாம். 

User Interface

User Interface-ல் கூட யூடியூப் பல மாற்றங்களை செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் இன்னும் எளிமையாகவும், வேகமாகவும் யூடியூபை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க