NASA : விமானம் சைஸ்.. பூமியை நோக்கி வரும் சிறுகோள்.. நாசா கொடுத்த எச்சரிக்கை!
பூமியை நாளை 100 அடி நீளமுள்ள விமான அளவிளான சிறுகோள் ஒன்று தாக்க உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. 2024 LH என்ற இந்த சிறுகோள் நாளைமாலை 4.38 மணிக்கு பூமிக்கு மிக அருகில் வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த கோளின் ஒவ்வொரு அசைவையும் நாசாவின் தலைமையில் இயங்கும் பல்வேரு குழுக்கள் தீவிரமாக கண்கானித்து வருகின்றன.
Asteroid : நாளை பூமியை நோக்கி ஒரு சிறுகோள் வர உள்ளதாக நாசா கணித்துள்ளது. 2024 LH என அழைக்கப்படும் அந்த சிறுகோள் தோராயமாக 100 அடி கொண்ட ஒரு விமானத்தின் அளவு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சிறுகோள் நாளை (02.07.2024) பூமியை நோக்கி வர உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். 2024 LH மணிக்கு 15,595 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வரும் பட்சத்தில், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் 2024 LH எவ்வளவு வேகத்தில் பூமியை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது, இதனால் பூமிக்கு ஏதும் பிரச்னை உருவாகுமா என்பதை விரிவாக பார்க்கலாம்.
2024 LH பூமியை நோக்கி 1.6 மில்லியன் கிலோமீட்டர் வேகத்தில் வருமே ஆனால் அது பாதுகாப்பானதாக இருக்கும். இது பூமிக்கும், நிலவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட சுமார் 4 மடங்கு அதிகம் ஆகும். இந்த சிறுகோள் நாளை மாலை 4.39-க்கு பூமிக்கு அருகில் வரும் என கணிக்கப்பட்டுள்ளது.
பூமியை தாக்கும் சக்தி படைத்ததா 2024 LH?
பூமிக்கு அருகில் உள்ள வானியல் பொருட்களை ஆய்வு செய்வதற்கான நாசாவின் மையம் (CNEOS), சிறுகோள் மற்றும் வால்மீன்கள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பூமிக்கு அருகில் உள்ள பெரும்பாலான வானியல் பொருட்கள் எந்த வித அச்சுறுத்தல்களையும் கொண்டிருப்பதில்லை. ஆனால் பூமிக்கு அருகில் 4.6 மில்லியன் மைல்கள் அளவில் சுமார் 140 மீட்டர்களுக்கும் மேலாக சிரிய உராய்வு ஏற்பட்டாலும் அது ஆபத்தானதாக மாறக்கூடும் என கூறப்படுகிறது. அந்த வகையில் 2024 LH ஆபத்தற்றவையாக கருதப்படுகிறது.
விண்கற்களை கண்காணிப்பது யார்?
நாசாவால் இயக்கப்படும் உலகலாவிய தொலைதொடர்பு நிறுவனங்கள், வானியலாளர்கள் இந்த நிகழ்வுகளின் மீது தனி கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த அமைப்பு விஞ்ஞானிகளை, சிறுகோள் சுற்றுப்பதைகளை துல்லியமாக வரைடமாக்கி அவற்றின் எதிர்கால பாதைகளை கணிக்கிறது. அதுமட்டுமன்றி இதில் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த ரேடார் தொழில்நுட்பம் ஒரு சிறுகோளின் அளவு மற்றும் வடிவத்தை கணிக்க உதவுகிறது.
இதையும் படிங்க : அம்மாடி! 9 நாள்களில் இடிந்து விழுந்த 5ஆவது பாலம்.. பீகாரில் தொடர் பதற்றம்!
நாளை பூமியை நோக்கி வரும் சிறுகோளால் பெரிய ஆபத்து ஒன்றும் நிகழப்போவதில்லை என்றாலும், பூமியின் பாதுகாப்பு மீதான முக்கியதுவத்தை இது நினைவூட்டுகிறது. இந்த நிலையில்தான் எதிர்காலத்தில் பூமிக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் திறன்களை மேம்படுத்துவதற்கான பணிகளையும், தொழில்நுட்பங்களையும் நாசா தீவிரமாக உருவாக்கி வருகிறது. வரும் 2028 ஆம் ஆண்டு தொடங்கப்பட உள்ள எதிர்கால NEO சர்வேயர் பணி, பூமிக்கு ஏதேனும் அச்சுறுத்தல் நிகழவிருந்தால் அவற்றை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்க இது உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.