5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

திருமணமான 12 நாட்களில் ஷாக்.. மனைவி ஆண் என கண்டுபிடித்த கணவர்.. நடந்தது என்ன?

ஏகே என்பவர் 2023 இல் ஆதிண்டா கன்சா (26) என்ற பெண்ணை சமூக வலைதளம் மூலம் சந்தித்துள்ளார். ஆன்லைனில் உரையாடிய பிறகு, இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். ஆதிண்டா கன்சா அவர்களின் சந்திப்பின் போது தனது முழு முகத்தையும் மறைக்கும் பாரம்பரிய இஸ்லாமிய உடையை அணிந்துள்ளார். தான் இஸ்லாம் மீது தீவிர ஈடுபாடு உள்ளவர் என்று ஏகேவிடம் கூறியுள்ளார். மேலும் இஸ்லாத்தின் மீதான அவளது ஈடுபாடாக நினைத்து அதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார் ஏகே.

திருமணமான 12 நாட்களில் ஷாக்.. மனைவி ஆண் என கண்டுபிடித்த கணவர்.. நடந்தது என்ன?
மாதிரிப் படம்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 28 May 2024 17:45 PM

இந்தோனேசியாவில் உள்ள நபர் ஒருவர் தனக்கு திருமணமான 12 நாட்களுக்குப் பிறகு தனது மனைவி பெண் இல்லை அவரும் ஒரு ஆண் என்பதை கண்டுபிடித்துள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக டேட்டிங் செய்து திருமணம் செய்துகொண்ட தனது மனைவி உண்மையில் பணத்திற்காக தன்னை மோசடி செய்ய முயற்சிக்கும் மற்றொரு ஆண் என்பதைக் கண்டுபிடித்தபோது அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் செய்திபடி, அந்த நபர் தனது மனைவியுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக டேட்டிங் செய்தும் அந்த நபர் அவரின் உண்மையான சுயரூபத்தை அறியாமல் இருந்தது நெட்டிசன்கள் இடையே அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளது.

ஏகே என்பவர் 2023 இல் ஆதிண்டா கன்சா (26) என்ற பெண்ணை சமூக வலைதளம் மூலம் சந்தித்துள்ளார். ஆன்லைனில் உரையாடிய பிறகு, இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். ஆதிண்டா கன்சா அவர்களின் சந்திப்பின் போது தனது முழு முகத்தையும் மறைக்கும் பாரம்பரிய இஸ்லாமிய உடையை அணிந்துள்ளார். தான் இஸ்லாம் மீது தீவிர ஈடுபாடு உள்ளவர் என்று ஏகேவிடம் கூறியுள்ளார். மேலும் இஸ்லாத்தின் மீதான அவளது ஈடுபாடாக நினைத்து அதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார் ஏகே.

Also Read : பிரிட்டன் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் அடுத்த தேர்தல்.. ஜூலை 4ல் வாக்குப்பதிவு!

ஒரு வருடத்திற்கும் மேலாக டேட்டிங் செய்த பிறகு, இருவரும் தங்கள் திருமணத்தைத் திட்டமிட முடிவு செய்தனர், அப்போது கன்சா திருமணத்தில் கலந்துகொள்ள தனக்கு குடும்பம் இல்லை என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 12 அன்று ஏகேவின் வீட்டில் நெருங்கிய நபர்களுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கன்சா திருமணத்திற்கு 5 கிராம் தங்கத்தை வரதட்சணையாகக் கொண்டு வந்துள்ளார். ஆனால் தம்பதியினர் தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யவில்லை.

கன்சா தனது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள மறுத்ததையும், வீட்டில் தனது முகத்தை மறைக்கும் ஹிஜாப் உடையை தொடர்ந்து அணிவதையும் ஏகே கவனித்து அவருக்கு சந்தேகங்கள் எழுந்தன. கன்சா தனது கணவருடன் நெருக்கமாக இருப்பதை தவிர்ப்பதற்கு தொடர்ந்து பல்வேறு காரணங்களைக் கூறி வந்துள்ளார். இது தொடர்பாக சந்தேகங்கள் எழுந்த நிலையில் ஏகே கன்சா குறித்து விசாரித்ததில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளது.

ஏகே கன்சாவின் குடும்ப முகவரியைக் கண்டுபிடித்தார், அங்கு அவர் முன்பு கூறியது போல் அவள் ஒரு அனாதை இல்லை என்பதைக் கண்டுபிடித்தார். அப்போது, க்ன்சாவின் பெற்றோர் இன்னும் உயிருடன் இருப்பதை அவர் கண்டுபிடித்தார். அவர்களுக்கு இருவரும் திருமணம் செய்துகொண்டு பற்றியும் எதுவும் தெரியவில்லை. தொடர்ந்து விசாரித்தபோது, கன்சா உண்மையில் ஒரு ஆண் என்பதையும் ஏகே கண்டுபிடித்தார்.  உடனடியாக இதுபற்றி போலீசாரிடம் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணையில், கன்சா 2020ஆம் ஆண்டு முதல் பெண் போல உடை அணியத் தொடங்கி, பெண் போல நடந்துகொள்ள முயன்றது தெரியவந்தது.

Also read… KGF பட சிறுவனா இது? ஆளே மாறிட்டாரே.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்!

ஆதிண்டா ஏ.கே.யின் குடும்பச் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார் என்றும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரைக் கைது செய்தனர். உரத்துப் பேசும்போது ஆதிண்டாவின் குரல் ஒரு பெண்ணின் குரல் போலவே உள்ளது என்றும் இதை பயன்படுத்தி பெண் போல நன்றாக நடித்து ஏமாற்றி இருக்கிறார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Latest News