5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Hajj Pilgrims: மெக்காவில் கடும் வெயில்.. ஹஜ் யாத்திரையில் 19 பேர் உயிரிழப்பு!

ஹஜ் யாத்திரையின்போது 19 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மெக்காவில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால், புனித பயணம் மேற்கொள்பவர்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, வெயிலின் தாக்கத்தால் வயதானவர்களால் ஹஜ் பயணம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், புனித பயணம் மேற்கொள்பவர்கள் அதிக வெப்ப சூழலில் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் வெப்பத்தின் தாக்கத்தால் 19 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜோர்டானைச் சேர்ந்த 14 யாத்ரீகர்கள் மற்றும் ஈரானைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனை ஜோர்டனின் வெளியுறுவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Hajj Pilgrims: மெக்காவில் கடும் வெயில்.. ஹஜ் யாத்திரையில் 19 பேர் உயிரிழப்பு!
ஹஜ் யாத்திரை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 17 Jun 2024 08:45 AM

மெக்காவில் கடும் வெயில்: இஸ்லாமியர்களின் 5 கடமைகளுள் ஒன்று ஹஜ். ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 30 லட்சத்துக்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் சவூ அரேபியாவின் மக்கா நகருக்கு புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக வருகை தருகிறார்கள். இந்தியாவில் தனியார் பயண நிறுவனங்கள் மட்டுமின்றி மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறையின் கீழ் வரும் இந்தியா ஹஜ் கமிட்டி ஹஜ் பயணத்துக்கு மக்களை அழைத்து சென்று வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டில் 18 லட்சம் யாத்ரீகர்கள் சவுதிக்கு பயணம் மேற்கொள்வார்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஹஜ் யாத்திரையின்போது 19 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்த ஆண்டில் சவுதி அரேபியாவில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

Also Read: குவைத் தீ விபத்து.. 7 தமிழர்கள் உயிரிழந்ததாக அறிவிப்பு.. விசாரணை தீவிரம்

மெக்காவில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால், புனித பயணம் மேற்கொள்பவர்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, வெயிலின் தாக்கத்தால் வயதானவர்களால் ஹஜ் பயணம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், புனித பயணம் மேற்கொள்பவர்கள் அதிக வெப்ப சூழலில் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. வெப்ப தாக்கத்தினை எதிர்கொள்ள கூடிய வகையிலான மருத்துவ குழுவினர் உட்பட 1,600 ராணுவ வீரர்களை சவுதி ராணுவம் அனுப்பியுள்ளது.

ஹஜ் யாத்திரையில் 19 பேர் உயிரிழப்பு: 

மேலும், 30 அதிரடி விரைவு குழவினரும், 5,000 சுகாதார மற்றும் முதலுதவி தன்னார்வலர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இப்படியான சூழலில் வெப்பத்தின் தாக்கத்தால் 19 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜோர்டானைச் சேர்ந்த 14 யாத்ரீகர்கள் மற்றும் ஈரானைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனை ஜோர்டனின் வெளியுறுவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சவுதி சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது அல்-அப்துலாலி செய்தியாளர்களிடம் கூறுகையில், நேற்று 2,760 யாத்ரீகர்கள் சூரிய ஒளி மற்றும் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் அதிக நேரம் வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், நீரேற்றத்துடன் இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இன்று மெக்காவில் வெப்பம் 47 டிகிரி செல்சியஸை எட்டும் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஹஜ் பயணித்தின்போது, ​​குறைந்தது 240 பேர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இவர்களின் பலர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிகிறது. கடந்த ஆண்டு 10,000க்கும் மேற்பட்டவர்களுக்கு வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டதாகவும், 10 சதவீத பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டதாக சவுதி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஆடிப்போன ஜப்பான்.. 2 நாளில் உயிரைப் பறிக்கும் மர்ம நோய்.. பீதியில் உலக நாடுகள்!