Nobel Prize: 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு.. என்ன காரணம் தெரியுமா? - Tamil News | 2024 Nobel Prize in Chemistry announced for David Baker Demis Hassabis and John M. Jumper | TV9 Tamil

Nobel Prize: 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு.. என்ன காரணம் தெரியுமா?

புகழ்பெற்ற வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபல் என்பவர் நினைவாக தான் ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. பொருளாதாரம், இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம், அமைதி என பல பிரிவுகளில் இந்த விருதானது வழங்கப்படுகிறது. 1895 ஆம் ஆண்டில் இருந்து நோபல் பரிசு முறை தொடங்கப்பட்டாலும் முதல்முறையாக 1901 ஆம் ஆண்டு தான் பரிசு வழங்கப்பட்டது.

Nobel Prize: 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு.. என்ன காரணம் தெரியுமா?

கோப்பு புகைப்படம்

Updated On: 

09 Oct 2024 18:02 PM

நோபல் பரிசு: 2024 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ்  அறிவித்துள்ளது. அதன்படி டேவிட் பேக்கர்,  டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் ஆகிய மூன்று பேருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தது. இதில் டேவிட் பேக்கருக்கு கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது. அதேபோல் புரத அமைப்புகளை அதன் அமினோ அமில வரிசையிலிருந்து கணித்ததற்காக டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் ஆகிய இருவருக்கும் விருதானது வழங்கப்பட்டுள்ளது.  முன்னதாக நேற்று முன்தினம் மருத்துவத்துக்கான் நோபல் பரிசானது விக்டர் அம்புரோஸ் மற்றும் கோரி ருவ்குன் ஆகியோருக்கும், நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஜெ.ஹாப்ஃபீல்ட், ஜாஃப்ரி இ.ஹிண்டன் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியன் தாத்தாவாக மாறிய கணவன்.. லஞ்சம் வாங்கிய மனைவிக்கு ஜெயில்!

புரதங்கள் பெரிய, சிக்கலான மூலக்கூறுகள், அவை உடலில் பல முக்கிய பங்கை வகிக்கின்றன. அவை அமினோ அமிலங்கள் எனப்படும் சிறிய அலகுகளால் ஆனவை. இவை நீண்ட சங்கிலிகளில் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. உடலில் 20 வெவ்வேறு வகையான அமினோ அமிலங்கள் உள்ள நிலையில் அவை உடலில் அமைந்துள்ள குறிப்பிட்ட வரிசை புரதத்தின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை தீர்மானிக்கிறது. விருது பெறும் 3 பேரில் ஒருவரான டேவிட் பேக்கர் கடந்த 2003 ஆம் ஆண்டில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான , இந்த நடைமுறையை பயன்படுத்தி மற்ற புரதங்களைப் போலல்லாத புதிய புரதத்தை வடிவமைப்பதில் வெற்றி பெற்றார். அப்போது இருந்தே அவரது ஆராய்ச்சி குழு ஒன்றன் பின் ஒன்றாக கற்பனை புரத உருவாக்கத்தை உண்டாக்க தொடங்கியது.

இதையும் படிங்க: Benefits of Eating Fish: மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. பலவீனத்தை போக்கும் அற்புத மருந்து!

இதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டில் டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோர் கூகுள் நிறுவனத்தின் DeepMind திட்டத்தின் ஒரு பகுதியாக AlphaFold2 என்ற AI மாதிரியை உருவாக்கினர். இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த 200 மில்லியன் புரதங்களின் கட்டமைப்பைக் கணிக்க முடிந்தது. மேலும் டெமிஸ் ஹசாபிஸ் லண்டனில் கூகுள் டீப் மைண்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். அதேசமயம் ​​ஜான் எம். ஜம்பர் டீப் மைண்டில் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நோபல் பரிசு நடைமுறை

ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரம், இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம், அமைதி என பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்தந்த துறைகளில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை படைத்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் நடப்பாண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபல் என்பவர் நினைவாக இப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 1895 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டாலும், 1901 ஆம் ஆண்டு தான் முதல்முறையாக நோபல் பரிசு முதல்முறையாக வழங்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நோபல் பரிசுகள் வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி ஆல்ஃபிரட் நோபல் நினைவுத் தினம் அன்று வழங்கப்படும்.

மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால் என்னாகும்?
செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா ? அப்போ இதை பாலோ பண்ணுங்க
மோகன் லால் உடன் இருக்கும் இந்த சிறுமி யார்?
Exit mobile version