5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

காசாவில் சர்வநாசம்.. அட்டூழியம் செய்யும் இஸ்ரேல்.. தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

கடந்த 9 மாதங்களாக நடந்து வரும் போரில் சுமார் 37,834 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 86,858 பேர் காயம் அடைந்துள்ளனர்.  இந்த போரினால் அதிகம் பாதிப்புக்குள்ளானது பெண்களும், குழந்தைகளுமே ஆவர். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 224 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காசாவில் சர்வநாசம்.. அட்டூழியம் செய்யும் இஸ்ரேல்.. தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
இஸ்ரேல் – காசா போர்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 30 Jun 2024 11:03 AM

தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால், அங்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது.  தங்கள் நாட்டுக்குள் நுழைந்து அக்டோபர் 7ஆம் தேதி சுமார் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் படையினரை ஒழித்துகட்டுவதற்காக, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் சுமார் 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 9 மாதங்களாக நடந்து வரும் போரில் சுமார் 37,834 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 86,858 பேர் காயம் அடைந்துள்ளனர்.  இந்த போரினால் அதிகம் பாதிப்புக்குள்ளானது பெண்களும், குழந்தைகளுமே ஆவர். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 224 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: கசினோவில் 4 மில்லியன் டாலர் வென்ற நபர்.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!

9 மாதங்களாக நீடிக்கும் போர்:

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் சூழல் உருவாகியது. இதனால், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுக்களுக்கு இடையே சண்டை நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதலுக்கு முக்கிய காரணம் காசா பகுதியாகும். இது யாருக்கு சொந்தம் என்பது தான் தற்போது பிரச்னைக்கு முக்கிய காரணம். இந்த பகுதிக்கு இருநாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றனர்.

இந்த காசா பகுதி என்பது பாலஸ்தீனம் ஆதரவு பெற்ற ஹமாஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதியை மீட்க இஸ்ரேல் அமெரிக்க உதவியுடன் முயற்சித்து வருவதாக தெரிகிறது. காசா பகுதியை விட்டுக்கொடுக்க ஹமாஸ் அமைப்பு மறுத்து வரும் நிலையில், காசா-எகிப்து எல்லையான ரஃபாவின் முழு கட்டுப்பாட்டையும் இஸ்ரேல் ராணுவது தன் வசத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதனால், இஸ்ரேல் தனது போரை நீடிப்பதாக அறிவித்திருக்கிறது.

ஐ.நா. அதிர்ச்சி தகவல்:

இந்த போரினால் காசாவில் சுமார் 5 லட்சம் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா. கூறியுள்ளது. காசாவில் பஞ்சத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. சுமார் 4.95 லட்சம் பாலஸ்தீனர்கள் கடுமையான உணவு பஞ்சத்தில் இருப்பதாக ஐ.நா. கூறியுள்ளது. அதேபோல, 7.4 லட்சம் மக்கள் உணவு பாதுகாப்பு அவசரநிலையில் உள்ளனர். போர் காரணமாக சர்வதேச நாடுகள் அனுப்பும் உதவி காசாவுக்கு செல்லவில்லை என ஐ.நா தெரிவித்துள்ளது.

Also Read: பூமிக்கு திரும்ப முடியாத நிலையில் சுனிதா வில்லியம்ஸ்.. விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு..!