Donald Trump : பொதுவெளியில் காட்சிப்படுத்தப்பட்ட டொனால்ட் டிரம்பின் ராட்சத நிர்வாண சிலை.. பொதுமக்கள் கடும் விமர்சனம்!
President Election | அமெரிக்க அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பாக தற்போது துணை அதிபர் மற்றும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட இருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக பல்வேறு எதிர்ப்புகளை அவர் பெற்றார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின், ராட்சத நிர்வாண சிலை காட்சி படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவெளியில் அத்தகைய சிலை காட்சிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பலரும் அதற்கு கடும் எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், அந்த சிலை எங்கு காட்சிப்படுத்தப்பட்டது, ஏன் காட்சிப்படுத்தப்பட்டது குறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்.
🚨🚨 BREAKING : Liberals placed a 43-foot naked statue of President Donald Trump near Kamala Harris Las Vegas rally.
Thoughts? pic.twitter.com/ge0IoWQBPq
— JOSH DUNLAP (@JDunlap1974) September 30, 2024
நெருங்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் – வெற்றி பெற போவது யார்?
அமெரிக்க அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பாக தற்போது துணை அதிபர் மற்றும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட இருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக பல்வேறு எதிர்ப்புகளை அவர் பெற்றார். வயது மூப்பு மற்றும் நிதானமற்று இருப்பதாலும் அவருக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை என பரவலாக எதிர்ப்புகள் எழுந்தன. இந்த கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து, தான் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக பைடன் அறிவித்தார். இதனை தொடர்ந்து கமலா ஹாரிஸை அவர் அதிபர் வேட்பாளராக முன்மொழிந்தார். பைடனின் பரிந்துரையின் படியே கமலா ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையும் படிங்க : Nepal Floods: நேபாளத்தை புரட்டி போட்ட கனமழை.. மூழ்கிய காத்மாண்டு.. 170-ஐ தாண்டிய உயிரிழப்பு!
கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் இடையே கடும் போட்டி
கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டது முதலே, டிரம்ப் மற்றும் கமலா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முன்னதாக கமலா தனக்கு போட்டியே இல்லை என்று தெரிவித்த டிரம்ப், பின்பு கமலாவுக்கு கிடைத்த பேராதரவு காரணமாக அவருடன் விவாதம் நடத்தினார். அதில் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இனி கமலா உடன் மீண்டும் விவாதம் நடத்த தான் தயாராக இல்லை என்று டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து கமலா மீண்டும் டிரம்பை விவாதத்திற்கு அழைத்திருந்தார்.
இதையும் படிங்க : Uttarpradesh: ஆன்லைனில் ஆர்டர்.. டெலிவரி இளைஞரை கொன்று ஐபோனை எடுத்துச்சென்ற இளைஞர்!
இதனை தொடர்ந்து, தான் தேர்தலில் தோல்வியடைந்தால் இதுவே தனக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என்று டிரம்ப் பரபரப்பு தகவலை வெளியிட்டார். ஆனால் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைய வாய்ப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு கமலா ஹாரிஸுக்கும், டிரம்புக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் லாஸ் வேகஸில் டிரம்பில் நிர்வாண சிலை காட்சிப்படுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : Rajinikanth: ரத்தநாள வீக்கம்.. ஸ்டண்ட் சிகிச்சை.. ரஜினிக்கு இதுதான் பிரச்னை.. மருத்துவமனை அறிக்கையின் முழு விவரம்!
டிரம்பின் நிர்வாண சிலையால் பரபரப்பு
அமெரிக்காவின் லாஸ் வேகஸ் பகுதியில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சுமார் 47 அடி உயர ராட்சத நிர்வாண சிலை காட்சிப்படுத்தப்பட்டது. வார இறுதி நாட்களில் காட்சிப்படுத்தப்பட்ட அந்த சிலை நேற்று அப்புறப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். லாஸ் வேகஸில் நடைபெற உள்ள கமலா ஹாரிஸின் பிரசாரத்தை முன்னிட்டு அவரது ஆதரவாளர்களால் இந்த சிலை காட்சிப்படுத்தப்பட்டது என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.