5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கண்ணில் பட்டவர்களை குத்திக் கொன்ற இளைஞர்.. 8 பேர் உயிரிழப்பு.. சீனாவில் ஷாக்!

சீனாவின் வுக்ஸி நகரில் 21 வயது இளைஞர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. அதாவது, கல்வி நிறுவனத்தில் அந்த இளைஞர் பலரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

கண்ணில் பட்டவர்களை குத்திக் கொன்ற இளைஞர்.. 8 பேர் உயிரிழப்பு.. சீனாவில் ஷாக்!
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 17 Nov 2024 06:47 AM

சீனாவின் வுக்ஸி நகரில் 21 வயது இளைஞர் நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. அதாவது, கல்வி நிறுவனத்தில் அந்த இளைஞர் பலரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வூக்ஸி நகரில் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் எண்ணற்ற மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று இரவு வழக்கம் போல் மாணவர்கள் வந்தனர்.

கண்ணில் பட்டவர்களை குத்திக் கொன்ற இளைஞர்

அப்போது, அங்கிருந்த 21 வயதான இளைஞர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக கத்தியால் தாக்குதல் நடத்தினர். இதனால் மாணவர்கள் அங்குமிங்கும் ஓடினர். இருப்பினும், அந்த இளைஞர் பல மாணவர்களை கத்தியால் குத்தியிருக்கிறார்.

இதில் சம்பவ இடத்திலேயே 8 பர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அங்கு உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Also Read : டிரம்ப் ஆட்சியில் இருந்து தப்பிக்க வழி.. கடலிலேயே 4 வருடங்கள்.. கப்பல் நிறுவனம் வழங்கும் அதிரடி ஆஃபர்!

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 21 வயதான இளைஞர் இந்த கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர் என்று அடைடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தான் அவர் தனது பட்டப்படிப்பை முடித்தார். ஆனால் அவர் தேர்ச்சி பெறவில்லை.

அதிர்ச்சி காரணம்

இந்த ஆத்திரத்தில் அவர் பலரையும் கத்தியால் குத்தியிருக்கலாம் என்று கூறியுள்ளனர். இந்த வார தொடக்கத்தில், தெற்கு நகரமான ஜுஹாய் பகுதியில் 62 வயதான முதியவர் தனது காரை வைத்து மோதியதில் 35 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அதாவது, விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 35 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சமீப மாதங்களில் பல தாக்குதல்கள் நடந்துள்ளன.

Also Read : 30 நிமிடத்தில் அமெரிக்கா டூ டெல்லி பயணம்.. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் தெரியுமா?

அதாவது, கடந்த அக்டோபர் மாதத்தில் ஷாங்காய் நகரில் இளைஞர் ஒருவர் கத்திக்குத்தி தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தெரிகிறது.  இப்படி தொடர்ந்து கத்திக்குத்து தாக்குதல் நடந்து வருவதை அங்கிருக்கும் மக்கள் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Latest News