ரஃபாவில் கொத்து கொத்தமாக கொல்லப்படும் குழந்தைகள்.. விழிக்குமா உலக நாடுகள்.. வைரலாகும் பதிவு! - Tamil News | | TV9 Tamil

ரஃபாவில் கொத்து கொத்தமாக கொல்லப்படும் குழந்தைகள்.. விழிக்குமா உலக நாடுகள்.. வைரலாகும் பதிவு!

Updated On: 

29 May 2024 11:36 AM

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். அதாவது, "All Eyes On Rafah" என்பதை மேற்கொள்காட்டி பலரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டரை பதிவிட்டு வருகின்றனர். உலக மக்களின் கவனத்தை ஈர்த்த இந்த சொற்றொடருடன் கூடிய போஸ்டரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2.9 கோடி பேர் பகிர்ந்துள்ளனர்.

ரஃபாவில் கொத்து கொத்தமாக கொல்லப்படும் குழந்தைகள்.. விழிக்குமா உலக நாடுகள்.. வைரலாகும் பதிவு!

ரஃபா தாக்குதல்

Follow Us On

ரஃபா அகதிகள் முகாம் மீது தாக்குதல்: தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் என 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஃபாவின் மையப்பகுதியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள அல்-சுல்தான் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 26ஆம் தேதி வான்வழித் தாக்குதல் நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்தனர். இதற்கு சர்வதேச அளவில் பெரும் கன்டனங்களை எழுந்தன. இந்த நிலையிலும், அதே அல்-சுல்தான் பகுதியில் இஸ்ரேல் படையினர் நேற்றுமுன்தினம் இரவும் தீவிர தாக்குதல் நடத்தினர். காசாவின்ர ரஃபா நகரத்தில் லட்சக்கணக்கானவர்கள் தஞ்சம் அடைந்திருந்தனர். அந்த நகரத்தில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளதாக கூறிய இஸ்ரேல், அந்த நகர் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இருப்பினும், அதை கண்டு கொள்ளாமல் இஸ்ரேல் ரஃபா மீதான தாக்குதல் திட்டத்தை முன்னெடுத்து சென்றது. இதனை அடுத்து, ஐ.நாவின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஃபா தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேலுக்கு கடந்த 25ஆம் தேதி உத்தரவிட்டது. அதையும் மீறி தனது தாக்குதல் நடவடிக்கையை தொடர்ந்த இஸ்ரேல், தல் அல்-சுல்தான் அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 45 பேர் உயிரிழந்தது சர்வதேச அளவில் பெரும் கண்டனத்தை எழுப்பி உள்ளது.

Also Read: திருமணமான 12 நாட்களில் ஷாக்.. மனைவி ஆண் என கண்டுபிடித்த கணவர்.. நடந்தது என்ன?

45 பேர் உயிரிழப்பு:

இந்த நிலையில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். அதாவது, “All Eyes On Rafah” என்பதை மேற்கொள்காட்டி பலரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டரை பதிவிட்டு வருகின்றனர். உலக மக்களின் கவனத்தை ஈர்த்த இந்த சொற்றொடருடன் கூடிய போஸ்டரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2.9 கோடி பேர் பகிர்ந்துள்ளனர்.

காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுமார் 12,00 பேர் உயிரிழந்தனர். அங்கிருந்து சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்து சென்றனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்து, பிணைக் கைதிகளை விடுவிப்பதாக சூளுரைத்த இஸ்ரேல், காசா மீது வான்வழியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ரஃபாவுக்கு லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்தனர். இப்படியான சூழலில் தான் ரஃபாவில் உள்ள அகதிகள் முகாமல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால், பலரும் ரஃபாவில் இருந்து வெளியேறி வருகின்றனர். ரஃபா நகரத்தில் இருந்து இந்த மாதம் தொடக்கம் முதல் இதுவரை 10 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஸப்பா.. என்னா தூக்கம்.. என்னா தூக்கம்.. ஜோ பிடன் வீடியோ வைரல்!

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version