5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Donald Trump : டிரம்ப் ஆட்சியில் இருந்து தப்பிக்க வழி.. கடலிலேயே 4 வருடங்கள்.. கப்பல் நிறுவனம் வழங்கும் அதிரடி ஆஃபர்!

Skip Forward | இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்றுள்ள நிலையில், பைடனின் ஆட்சியை விடவும் டிரம்பின் ஆட்சி மிக கடுமையாக இருக்கும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், டிரம்பின் ஆட்சியில் இருந்து தப்பிக்க அமெரிக்காவை சேர்ந்த பிரபல சொகுசு கப்பல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

Donald Trump : டிரம்ப் ஆட்சியில் இருந்து தப்பிக்க வழி.. கடலிலேயே 4 வருடங்கள்.. கப்பல் நிறுவனம் வழங்கும் அதிரடி ஆஃபர்!
டொனால்ட் டிரம்ப்
vinalin
Vinalin Sweety | Published: 16 Nov 2024 16:47 PM

கடந்த நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் வரும் ஜனவரி 2025 ஆம் ஆண்டு அதிபராக பதவி ஏற்பார். 2025, ஜனவரி மாதம் முதல் 2029 ஆம் ஆண்டு வரை அவர் அதிபர் பதவியில் இருப்பார். இந்த ஆட்சி காலத்தில் டிரம்ப், அமெரிக்காவில் பல்வேறு புதிய மாற்றங்கள் மற்றும் சட்டங்களை கொண்டு வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பைடனின் ஆட்சியை விடவும் டிரம்பின் ஆட்சி கடுமையாக இருக்கும் என பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், டிரம்பின் கடுமையான ஆட்சியில் இருந்து தப்பிக்கும் வகையில், அமெரிக்காவின் சொகுசு கப்பல் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : 30 நிமிடத்தில் அமெரிக்கா டூ டெல்லி பயணம்.. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் தெரியுமா?

விறுவிறுப்பாக நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்காவில், ஜோ பைடன் தலைமையிலான அரசின் பதவி காலம் முடிவடையும் தருவாயில் இருந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் தேர்தல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் அப்போதைய அதிபராக பதவி வகித்த ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும்,  போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் பிரச்சாரங்களின் போது ஜோ பைடன் சந்தித்த கடும் விமர்சனங்கள் காரணமாக அவர் தேர்தலில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், அதிபர் போட்டியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்த பைடன், ஜனநாயக கட்சி சார்பில் அப்போதைய துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸ் பெயரை முன்மொழிந்தார்.

இதையும் படிங்க : மூன்றாவது முறையாக அதிபராகும் டிரம்ப்? தலைகீழாக மாறும் அமெரிக்க அரசியல்!

295 இடங்களில் வெற்றி பெற்று அதிபரானார் டிரம்ப்

இந்த நிலையில், சொந்த கட்சியில் இருந்தே எதிர்ப்புகள் எழுந்ததன் காரணமாக பைடனுக்கு பதிலாக ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே, எப்போது ஜோ பைடனுக்கு பதிலாக வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டாரோ அப்போதே, தான் வெற்றி பெற்றுவிட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.  இந்த நிலையில், எதிர் போட்டியாளரான டொனால்ட் டிரம்ப் உடன் கமலா ஹாரிஸ் நேர் விவாதம் நடத்தினார். கமலா ஹாரிஸ், டிரம்ப் ஆகியோர் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களுக்கு ஆதரவாக சில முக்கிய பிரபலங்களும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், தேர்தல் முடிவுகளில் சுமார் 295 இடங்களில் வெற்றி பெற்று அதிபரானார் டொனால்ட் டிரம்ப். 226 இடங்களில் வெற்றி பெற்று தோல்வியை தழுவினார் கமலா ஹாரிஸ்.

இதையும் படிங்க : Donald Trump: டிரம்ப் அமைச்சரவையில் இடம்பெற போகும் முக்கிய நபர்கள்.. வெளியான லிஸ்ட் இதோ..

அச்சத்தில் அமெரிக்க மக்கள் – அதிரடி முடிவு எடுத்த கப்பல் நிறுவனம்

இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்றுள்ள நிலையில், பைடனின் ஆட்சியை விடவும் டிரம்பின் ஆட்சி மிக கடுமையாக இருக்கும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், டிரம்பின் ஆட்சியில் இருந்து தப்பிக்க அமெரிக்காவை சேர்ந்த பிரபல சொகுசு கப்பல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது, Villa Vic Residences என்ற சொகுசு கப்பல் நிறுவனம், நான்கு ஆண்டுகள் கடலிலேயே உலகத்தை சுற்றி வரும் பயண திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தி அந்த நிறுவனம் “Skip Forward” என்று பெயரிட்டுள்ளது. இந்த கப்பல் அடுத்த 4 ஆண்டுகளில் சுமார் 140 நாடுகளில் உள்ள 425 துறைமுகங்களுக்கு சென்று வர உள்ளது. தற்போது தொடங்க உள்ள இந்த பயணம் 4 ஆண்டுகளுக்கு நீடிக்க உள்ளது. அதன் படி, இதில் பயணிக்கும் மக்கள் 2029 ஆம் ஆண்டு தான் மீண்டும் அமெரிக்காவிற்குள் வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News