“100% வரி போடுவேன்” இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளை மிரட்டிய டிரம்ப்!

Donald Trump : டாலருக்கு பதிலாக வேறு கரன்சியை பயன்படுத்தப்படும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். மாற்று கரன்சியை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கும் இந்தியா, ரஷ்யா உள்ளடக்கிய பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

100% வரி போடுவேன் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளை மிரட்டிய டிரம்ப்!

டிரம்ப் (picture credit : PTI)

Updated On: 

01 Dec 2024 18:03 PM

டாலருக்கு எதிராக மாற்று நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். டாலருக்கு பதிலாக வேறு கரன்சியை பயன்படுத்தப்படும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.  சர்வதேச வணிகத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் நாணயனமாக டாலர் இருக்கிறது. அமெரிக்க உடனான வர்த்தகத்திற்கு மட்டுமின்றி சர்வதேச அளவில் நடக்கும் அனைத்து வர்த்தகத்திற்கும் டாலர் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளை மிரட்டிய டிரம்ப்

வேறு நாடுகளில் இருந்து எந்த பொருளை வாங்கினால் அந்த சம்பந்தபட்ட நாட்டின் கரன்சியில் பணம் செலுத்துவது இல்லை. அதற்கு மாறாக அமெரிக்க டாலரில் தான் பணத்தை செலுத்தி பொருட்களை வாங்கி வருகின்றனறர். அந்த அளவுக்கு அமெரிக்க டாலர் வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

இந்த சூழலில் தான், டாலருக்கு எதிராக மாற்று நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பிரிக்ஸ் நாடுகள் டாலரை விட்டு விலகிச் செல்ல முயல்கின்றன.

இதனால் பிரிக்ஸ் நாடுகளிடம் இருந்து எங்களுக்கு ஒரு உறுதிப்பாடு தேவை. பிரிக்ஸ் நாடுகள் ஒரு புதிய நாணயத்தை உருவாக்கவோ அல்லது டாலருக்கு பதிலாக வேறு எந்த நாணயத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி அளிக்க வேண்டும். அமெரிக்க டாலரை அவர்கள் பயன்படுத்தாவிட்டால் அவர்கள் 100% வரி விதிக்கப்படும்.

Also Read : பாலியல் தொழிலாளிகளுக்கு பென்ஷன்.. மகப்பேறு விடுப்பு.. அதிரடி சட்டம் அமல்!

பிரிக்ஸ் நாடுகள் சொல்வது என்ன?

மேலும் அமெரிக்காவுடன் அவர்கள் எந்தவொரு உறவையும் வைத்துக் கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார். பிரிக்ஸ் என்பது பிரேஸில், ரஷ்யா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஒரு அமைப்பாகும்.

கடந்த 2009ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அந்த அமைப்பில் பல நாடுகள் சேர விருப்பம் தெரிவித்துள்ளன.  கடந்த அக்டோபர் மாதம் கூட ரஷ்யாவின் கசானில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் எகிப்து, ஈரான் மற்றும் ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் டாலர் அல்லாத பரிவர்த்தனைகளை அதிகரிப்பது மற்றும் உள்ளூர் நாணயங்களை வலுப்படுத்துவது குறித்து விவாதம் நடத்தின.

இந்த உச்சி மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், “அமெரிக்கா தனது டாலரை ஆயுதமாக்குகிறது. டாலரை பயன்படுத்த மறுப்பது நாங்கள் அல்ல. ஆனால் அவர்கள் எங்களை வேலை செய்ய விடவில்லை என்றால், நாங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்றார்.

குறிப்பாக, பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட வங்கியான swift-க்கு மாறாக ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியது. அமெரிக்காவின் டாலர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரானது என இந்தியாவும் கூறியுள்ளது.

Also Read : “என்னை இன்னும் வலிமையாக்குது” அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு அதானி பதிலடி!

அக்டோபரில் நடந்த உச்சி மாநாட்டில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இது இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையிலோ அல்லது நாட்டின் அரசியல் அல்லது மூலோபாயக் கொள்கைகளிலோ ஒரு பகுதியும் இல்லை. ஆனால் வர்த்தக கூட்டாளிகள் டாலர்களை எடுத்துக் கொள்ளாத சந்தர்ப்பங்களில் என்ன செய்வது? இதனால் வர்த்தகத்தில் சிக்கல் எழுகிறது. எனவே, இதற்கான தீர்வுகளை நாங்கள் பார்த்து வருகிறோம்” என்றார்.

இணையத்தில் வைரலாகும் சித்தார்த் – அதிதி ராவ் தம்பதியின் போட்டோஸ்
நீல நிற புடவையில் நடிகை அனிகா... வைரலாகும் போட்டோஸ்
நடிகை அனுபமா பரமேஷ்வரனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!
நடிகை ரஜிஷா விஜயன் பற்றிய சுவாரஸ்ய தகவல்..