Srilanka Presidential Election : விறுவிறுப்பாக நடைபெறும் இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. முன்னிலை வகிக்கும் அனுரகுமார நிஸாநாயக்க!

Election Counting | இலங்கையில் நேற்று (21.09.2024) ஜனாதிபதி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இலங்கையில் நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும். வாக்கு எண்ணிக்கை முடிந்து இன்று (22.09.2024) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

Srilanka Presidential Election : விறுவிறுப்பாக நடைபெறும் இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. முன்னிலை வகிக்கும் அனுரகுமார நிஸாநாயக்க!

அனுரகுமார நிஸாநாயக்க

Updated On: 

22 Sep 2024 08:36 AM

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார நிஸாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். இன்று அதிகாலை நிலவரப்படி, அவர் சுமார் 4,99,084 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். அதாவது மற்ற வேட்பாளர்களை விட அவர சுமார் 52.25% வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளார். இந்த நிலையில் மற்ற போட்டியாளர்களின் நிலை என்ன, இன்னும் எத்தனை சுற்று வாக்கு எண்ணிக்கை உள்ளது என்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Banana Benefits: தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? பல நோய்கள் நீங்கும்!

விறுவிறுப்பான நடைபெற்ற அதிபர் தேர்தல்

இலங்கையில் நேற்று (21.09.2024) ஜனாதிபதி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இலங்கையில் நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும். வாக்கு எண்ணிக்கை முடிந்து இன்று (22.09.2024) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியின் அடிப்படையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (75) சுயேட்சை வேட்பாளராக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். இதற்காக பல நிபுணர்கள் விக்கிரமசிங்கவை பாராட்டியுள்ளனர். இலங்கை அதிபர் தேர்தலில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 13,400க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் சுமார் 1.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இலங்கை வந்த ஐரோப்பிய கண்காணிப்பாளர்கள் குழு

நேற்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவொன்று இலங்கை வந்திருந்தது. ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக பல்வேறு சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் 116 பிரதிநிதிகள் இலங்கை வந்திருந்தனர். இதில் 78 பார்வையாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பிய ஒன்றியம் இதற்கு முன்னர் இலங்கையில் ஆறு முறை தேர்தல்களை கண்காணித்துள்ளது. கடைசியாக ஐரோப்பிய ஒன்றியம் 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது கண்காணித்தது. மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக பொதுநலவாய அமைப்பின் 22 பிரதிநிதிகளும் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சர்வதேச பார்வையாளர்கள் 25 மாவட்டங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க : Today’s Top News Headlines: இலங்கையின் அடுத்த அதிபர் ஆகிறார் அனுரகுமார திஸாநாயக்க? .. இன்றைய முக்கியச் செய்திகள்..

சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய விக்கிரமசிங்க

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (75) நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியின் அடிப்படையில் சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இதற்காக பல நிபுணர்கள் அவரை பாராட்டியுள்ளனர். நாங்கள் ஆரம்பித்துள்ள சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் நாட்டின் திவால்நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதை உறுதி செய்வேன் என்று பேரணியில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முக்கிய முகங்கள் யார்?

முக்கோண தேர்தல் போரில், விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தியின் (NPP) அனுர குமார திஸாநாயக்க (56) மற்றும் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் சஜித் பிரேமதாச (57) ஆகியவர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. 1982ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக முக்கோணப் போட்டி நடைபெறுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க : TVK Vijay: தேதி குறித்த விஜய்.. போலீஸிடம் அனுமதி கேட்ட புஸ்ஸி ஆனந்த்.. களைகட்டும் த.வெ.க மாநாடு!

வெற்றி வாகை சூட போகும் அனுரகுமார நிஸாநாயக்க?

இந்த நிலையில் இலங்கை அதிபர் வாக்கு எண்ணிக்கையில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார நிசாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். மற்ற போடியாளர்களை விட அவர் 50% வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலை வகித்து வரும் நிலையில், அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?