5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக களத்தில் குதித்த இசைப்புயல்.. அமெரிக்க தேர்தலில் செம்ம ட்விஸ்ட்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிரச்சார பாடலை உருவாக்கியுள்ளார். நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பிரச்சார பாடல் கமலா ஹாரிஸுக்கு ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக களத்தில் குதித்த இசைப்புயல்.. அமெரிக்க தேர்தலில் செம்ம ட்விஸ்ட்!
கமலா ஹாரிஸ் – ஏ.ஆர்.ரஹ்மான் (picture credit: Getty/PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 06 Nov 2024 11:35 AM

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிரச்சார பாடலை உருவாக்கியுள்ளார். நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பிரச்சார பாடல் கமலா ஹாரிஸுக்கு ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக களத்தில் குதித்த இசைப்புயல்

இதற்கான பிரச்சாரமும் தீவிரமாக நடந்து வருகிறது.  இதில் கமலா ஹாரிஸுக்கு ஆசிய அமெரிக்க, பசிபீக் திவுவாசிகளின் பெற்றி அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இதோடு இல்லாமல், இவரது பிரச்சாரத்திற்கு நிதி திரட்டுவது, நிகழ்ச்சிகளை நடத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Also Read: “இஸ்ரேலுக்கு உதவினால் அவ்வளவுதான்” அரபு நாடுகளுக்கு ஈரான் வார்னிங்!

அந்த வகையில், தற்போது புதிய முயற்சியை எடுத்துள்ளது. அதாவது, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரச்சார பாடலை உருவாக்க உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அழைத்துள்ளது ஏஏபிஐ அமைப்பு. இதற்கான ஒப்பந்தத்தையும் ஏ.ஆர்.ரஹ்மானிடம் போட்டுள்ளது.


இதன்படி, 30 நிமிட பிரச்சார பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கி உள்ளார். இந்த 30 நிமிட பாடல் ஏ.ஆர்.ரஹ்மானின் புகழ் பெற்ற பாடல்கள், கமலா ஹாரிஸ் வாக்குறுதிகள், அவரின் உரைகள், அரசியல் வாழ்க்கை போன்றவை அந்த பாடலில் இடம்பெறுகிறது. இந்த பாடல் அக்டோபர் 13ஆம் தேதி இரவு 8 மணிக்கு AAPI விக்டரி ஃபண்டின் யூடியூப் சேனலில் வெளியாக உள்ளது. முன்னதாக, இதற்கான சிறிய டிரெய்லலை AAPI விக்டரி ஃபண்ட் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

Also Read: ஹரியானா புதிய முதல்வர் இவரா? அக்டோபர் 17ல் பதவியேற்பு.. பிரதமர் மோடி பங்கேற்பு!

சூடுபிடிக்கும் அதிபர் தேர்தல்:

உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்த ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் குடியரசுத் தலைவர் 97 வயதான டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பை விட கமலா ஹாரிஸுக்கு ஆதரவு பெருகி வருவதாக சமீபத்திய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News