Sunitha Williams: பூமிக்கு திரும்ப முடியாத நிலையில் சுனிதா வில்லியம்ஸ்.. விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு..!

தற்போது சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சக பணியாளர்களுடன் சேர்ந்து பயணித்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொடர்ந்து கோளாறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியிருக்கும் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 26-ம் தேதி (இன்று) பூமிக்கு திரும்பத் திட்டமிடப்பட்டு இருந்தது.

Sunitha Williams: பூமிக்கு திரும்ப முடியாத நிலையில் சுனிதா வில்லியம்ஸ்.. விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு..!

சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோர்

Updated On: 

26 Jun 2024 14:13 PM

விண்வெளி வீராங்கணை சுனிதா வில்லியம்ஸ்: சர்வதேச விண்வெளி ஆய்வு மைத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுனிதா வில்லியம்ஸ் பயணித்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் அடுத்தடுத்து சில கோளாறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவை பூர்விகமாக கொண்ட சுனிதா வில்லியம்ஸ் ஏற்கனவே இரண்டு முறை அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்கு சென்று திரும்பியுள்ளார். 2009ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி விண்வெளிக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். இது ஜூன் 22, 2007 வரை நீடித்தது. விண்கலத்தில் இருந்தபோது, 29 மணி நேரம் 17 நிமிடங்கள் வரை திறந்த விண்வெளியில் பயணம் செய்து அதிக நேரம் ஸ்பேஸ் வால்க் செய்த பெண் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார் சுனிதா வில்லியம்ஸ்.

அவரது இரண்டாவது பயணம் ஜூலை 14 முதல் நவம்பர் 18, 2012 வரை இருந்தது. தற்போது சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சக பணியாளர்களுடன் சேர்ந்து பயணித்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொடர்ந்து கோளாறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியிருக்கும் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 26-ம் தேதி (இன்று) பூமிக்கு திரும்பத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், விண்கலத்தில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் தொடர்பான ஆய்வு தொடர்வதால், பூமிக்கு திரும்புவதற்கான சுனிதா வில்லியம்ஸின் பயணம் காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Also Read: ஆன்லைன் டேட்டிங் ஆப் பகீர்.. ரூ.27000 பணத்தை ஏமாந்த சினிமா டெக்னீஷியன்.. சென்னையில் ஷாக்!

முன்னதாக கடந்த 7 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் தலைமையிலான விண்வெளி வீரர்களின் குழு ஒரு வார காலம் ஆய்வு மேற்கொண்டு பூமி திரும்ப இருந்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஹீலியம் கசிவுகள் மற்றும் த்ரெஷ்டர் செயலிழப்பு போன்ற முக்கிய பிரச்னைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான அறிக்கையில், விரிவான பகுப்பாய்வு மற்றும் சோதனைக்கு அனுமதிக்கும் வகையில், NASA மற்றும் Boeing ஆகியவை ஸ்டார்லைனர் பயணிகள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்குவதை நீட்டிக்க முடிவு செய்துள்ளன. முறையான மதிப்பாய்வுக்குப் பிறகு, பூமிக்கு திரும்பும் பயணத்திற்கான தேதி நிர்ணயிக்க விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் எப்படி ?

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!