5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Australia: சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை.. ஆஸ்திரேலியா அரசு அதிரடி முடிவு!

சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் இல்லாமல் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் மூலமாக பணம் சம்பாதிக்கவும் முடியும் என்ற முறை உள்ளதால் பலரும் தங்கள் குழந்தைகள் பெயரில் சமூக வலைத்தள அக்கவுண்ட் ஆரம்பித்து அவர்களை சிறு வயதிலேயே அதற்கு அடிமையாக்குவதாகவும் சொல்லப்படுகிறது.

Australia: சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை.. ஆஸ்திரேலியா அரசு அதிரடி முடிவு!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 10 Sep 2024 19:45 PM

சமூக வலைத்தளப் பயன்பாடு: ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை விடுத்து மைதானங்களிலும், நீச்சல் குளங்களிலும் விளையாடுவதை பார்க்க தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டிலேயே இந்த தடை அமல்படுத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.இது பெற்றோருக்கு ஆதரவாக இருப்பது மட்டுமல்லாமல் குழந்தைகள் பாதுகாப்பிலும் மிக முக்கியமான முடிவாக இருக்கும் என ஆண்டனி அல்பனிஸ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: Devara Trailer: யாரு சாமி நீ.. சுறாவை சாட்டையால் விரட்டும் ஜூனியர் என்.டி.ஆர்.. தேவரா ட்ரெய்லர் இதோ!

பெற்றோர்களுக்கு பெரிதும் உதவி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,  “சமூக ஊடகங்களில் தங்கள் குழந்தைகள் என்ன வயதில் இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கவலைப்படுவதாக கூறினார். சமூக ஊடகங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களுக்கும் குறைந்தபட்ச வயதை அமல்படுத்துவதற்கான சட்டத்தை வரும் பாராளுமன்ற கூட்டத்தில் அறிமுகப்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி மிச்சிகன் ஹெல்த் சி எஸ் மோட் குழந்தைகள் மருத்துவமனையின் சார்பில் குழந்தைகள் நலம் குறித்த தேசிய கருத்து கணிப்பு ஒன்று எடுக்கப்பட்டது. அதில் குழந்தைகள் மற்றும் பதிம வயதினருக்கு மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் காரணிகளில் முதன்மையானதாக சமூக வலைதளங்கள் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது அவர்களின் அன்றாட வாழ்வில் பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் நலத்தில் மிகப்பெரிய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க:Coriander Water Benefits: வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீர் குடிங்க.. இதுவே பல பிரச்சனைகளுக்கு மருந்தாகும்!

சமூக வலைத்தளங்கள் பயன்பாடு

சமூக வலைதள பயன்பாடு என்பது கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் அசுர வளர்ச்சி அடைந்து விட்டது. குறிப்பாக ஸ்மார்ட் போன் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் இல்லாமல் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் மூலமாக பணம் சம்பாதிக்கவும் முடியும் என்ற முறை உள்ளதால் பலரும் தங்கள் குழந்தைகள் பெயரில் சமூக வலைத்தள அக்கவுண்ட் ஆரம்பித்து அவர்களை சிறு வயதிலேயே அதற்கு அடிமையாக்குவதாகவும் சொல்லப்படுகிறது. சமூக வலைதளங்கள் தகவல் தொடர்பு சாதனமாக பயன்படுவதில் தவறில்லை. ஆனால் அது நம் நேரத்தை பெருமளவில் ஆக்கிரமிக்கிறது என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே இந்த தகவலை கேட்ட இணையவாசிகள், “மேற்கத்திய கலாச்சாரம் அதிகமாக இருக்குற நாட்டுலயே இப்படி ஒரு தடை விதிக்கிறாங்க. ஆனால் இங்க அப்படி எதுவும் பண்ண மாட்டாங்க..அய்யா இந்தியா ல அமலுக்கு கொண்டு வாங்க அய்யா உங்களுக்கு புண்ணியமா போகும்..நல்ல முடிவு இதை இந்தியாவில் அமல்படுத்தினால் நல்லா இருக்கும்..இதுவே இந்தியா வா இருந்தா இன்னம் லட்ச கணக்குல ஃபேக் ஐடி கிரியேட் பண்ணி சோஷியல் மீடியா யூஸ் பண்ணிட்டு இருப்பாங்க..” என வித்தியாசமாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 11 முதல் 15 வயதில் ஆன மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்லக்கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்தது. இளம் தலைமுறைகளிலேயே ஆறாம் விரலாக செல்போன் ஒட்டி காணப்படும் நிலையில் தொடர்ந்து இதனை பயன்படுத்துவதால் தூக்கமின்மை, கவனக்குறைவு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில்  ஸ்வீடன் அரசு முதலில் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தியது.

இந்நிலையில் தான் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை குறைக்க பிரான்சில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் உத்தரவு மீறி  பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்தால் அதனை ஆசிரியர்கள் பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News