2025ல் நடக்கப்போவது என்ன? நடுங்க வைக்கும் பாபா வங்கா கணிப்புகள்!

Baba Vanga Predictions 2025 : 2025ஆம் ஆண்டில் உலக அளவில் என்னென்ன நடக்கும் என்பதை பாபா வங்கா தனது கணிப்பில் எழுதி வைத்துள்ளதாக கூறப்படும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே அவரின் கணிப்புகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

2025ல் நடக்கப்போவது என்ன? நடுங்க வைக்கும் பாபா வங்கா கணிப்புகள்!

பாபா வங்கா

Updated On: 

14 Dec 2024 21:29 PM

2025ஆம் ஆண்டில் என்னென்ன நடக்கும் என்பதை பாபா வங்கா தனது கணிப்பில் எழுதி வைத்துள்ளதாக கூறப்படும் கணிப்புகள் வெளியாகி உள்ளன. எனவே அவரின் கணிப்புகள் என்னென்ன என்பதை பார்ப்போம். 2025ஆம் ஆண்டின் பாபா வங்காவின் கணிப்புகள் அச்சுறுத்தரலாக உள்ளன. அதாவது, 2025ஆம் ஆண்டில் உலகளாவிய போர்கள் தீவிரமமையும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். குறிப்பாக ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – பாலஸ்தீன போர் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவும் என்றும் இதனால் மனித உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் கணித்துள்ளார். மூன்றாம் உலகப் போராக கூட மாறலாம் என்று கணித்துள்ளார். இதனால் மக்கள் தொகை கணிசமாக குறையலாம்.

அதிரவிடும் பாபா வங்கா கணிப்புகள்

ஐரோப்பாவில் தொடங்கும் மோதல் மனிதகுலத்தின் அழிவின் தொடக்கமாக இருக்கும் என்றும் கணித்துள்ளார். இதனால் 5079ஆம் ஆண்டில் மனித இனமே அழிந்து விடும் என்று கூறியுள்ளார். அடுத்த ஆண்டு எலியன்களுடன் போரிடவும் நேரலாம் என்று கணித்துள்ளார். மேலும், 2042 ஆண்டில் ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய ஆட்சிகளாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், 2025ஆம் ஆண்டில் கிழக்கு மற்றும் மேற்கு இடையே ஒரு நீண்ட போர் இருக்கும். அதன் பின்னணியில் சிரியாவின் வீழ்ச்சி இருக்கும்.  மேலும், பாபா வாகாவின் கணிப்பின்படி, சில நாடுகள் 2025 ஆம் ஆண்டில் கடுமையான இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் மற்றும் வெள்ளம் போன்ற நிகழ்வுகள் அழிவை ஏற்படுத்தும் என்றார். மேலும், பாபா வாகாவின் கணிப்பின்படி, 2025ஆம் விண்வெளியில் மனிதர்கள் முக்கியமான கண்டுபிடிப்பை உருவாக்கலாம். இந்த கண்டுபிடிப்பு வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு கிரகத்தில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளாக இருக்கலாம் என்று கணித்துள்ளார்.

Also Read : ரூ.37 லட்சம் கோடியை தாண்டிய சொத்து மதிப்பு.. வரலாற்று சாதனை படைத்த எலான் மஸ்க்!

உலகப் போர் முதல் ஏலியன் வரை

2025 ஆம் ஆண்டில் சுகாதாரத் துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்று பாபா வெங்கா குறிப்பிட்டிருந்தார். சிகிச்சையில், குறிப்பாக மரபணு சிகிச்சையில் புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும். புற்றுநோய்க்கான தடுப்பூசி வெளிவர வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

2025ஆம் ஆண்டில் தொற்று நோய் பரவும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார். 2025 ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையலாம் என்று கணித்துள்ளார். மனதில் நினைக்கும் விஷயங்களை டெலிபதி மூலம் ஆயிரம் மைல்களுக்கு மேல் உள்ள ஒருவருக்கு பரிமாறுவதற்கான வளர்ச்சி ஏற்படலாம் என்று கணித்துள்ளார்.

பல்கேரியாவைச் சேர்ந்தவர் பாபா வங்கா. இவர் 1911 இல் பிறந்தார். பாபா வாங்காவின் உண்மையான பெயர் வாங்கெலியா பாண்டவ டிமிட்ரோவா. 12 வயதில் பார்வையை இழந்த பிறகு, பாபா வாங்கா எதிர்காலத்தைப் பார்க்க முடிந்தது என்று கூறப்படுகிறது. இவர் 1996ஆம் ஆண்டு இவர் இறந்தார்.

Also Read : Open AI-க்கு எதிராக புகார்.. முன்னாள் ஊழியர் மர்ம மரணம்.. யார் இந்த சுசீர் பாலாஜி?

யார் இந்த பாபா வங்கா?

இவர் இறக்கும் முன்பே கணிப்புகளை எழுதிவிட்டு சென்றதாக நம்பப்படுகிறது. இவர் பார்வையை இழந்த பிறகு எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும்போது இவருக்கு தெரிய வந்துள்ளதாகவும், இதனை அவர் கணிப்புகளாக எழுதி வைத்துள்ளதாக கூறுப்படுகிறது. 5079ஆம் ஆண்டு உலகம் அழியும் என்றும் அது வரை அவர் கணிப்புகளை எழுதி வைத்துள்ளதாக நம்பப்படுகிறது.

இவரின் கணிப்புகள் நடந்துள்ளது. அதன்படி, அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல், பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் உடைந்தது உள்ளிட்ட விஷயங்களை இவர் கணித்தது உண்மையாக நடந்ததாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புடவையில் சொக்க வைக்கும் நடிகை மாளவிகா மோகனன்
ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் பருப்பு சாப்பிட வேண்டும் - உங்களுக்கு தெரியுமா?
பெண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் சில முக்கிய பழக்கங்கள்!
கிறிஸ்துமஸ் கொண்டாட சிறந்த இடங்கள்!