Bangladesh Riots: மீண்டும் கலவர பூமியான வங்கதேசம்.. 100 பேர் உயிரிழப்பு.. இந்தியர்களுக்கு மத்திய அரசு அலர்ட்! - Tamil News | bangaldesh protest fresh clashes 97 killed sheikh Hasina resignation civil disobedience | TV9 Tamil

Bangladesh Riots: மீண்டும் கலவர பூமியான வங்கதேசம்.. 100 பேர் உயிரிழப்பு.. இந்தியர்களுக்கு மத்திய அரசு அலர்ட்!

Updated On: 

05 Aug 2024 07:53 AM

அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாகவே போராட்டங்கள் நடந்து வருகிறது. அங்கு சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராக முதலில் போராட்டம் அரங்கேறியது. இட ஒதுக்கீட்டை குறைத்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் அங்கு அமைதியான நிலையில், திடீரென நேற்று மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

Bangladesh Riots: மீண்டும் கலவர பூமியான வங்கதேசம்.. 100 பேர் உயிரிழப்பு.. இந்தியர்களுக்கு மத்திய அரசு அலர்ட்!

வங்கதேசத்தில் வன்முறை

Follow Us On

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாகவே போராட்டங்கள் நடந்து வருகிறது. அங்கு சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராக முதலில் போராட்டம் அரங்கேறியது. இட ஒதுக்கீட்டை குறைத்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் அங்கு அமைதியான நிலையில், திடீரென நேற்று மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதனால் வங்கதேசத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அங்கு மாணவர்களுக்கும் ஆளும் கட்சியின ஆதரவாளர்களுக்கு மோதல் வெடித்துள்ளது. இருதரப்புக்கு மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியுள்ளது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். போராட்டங்கள் கையை மீறிச் செல்லும் நிலையில், நிலைமையை சமாளிக்க நேற்று இரவு முதல் அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: உச்சக்கட்ட எதிர்பார்ப்பு.. கமலா ஹாரிஸ் உடன் நேருக்கு நேர் விவாதம்.. தேதி குறித்த டிரம்ப்!

மேலும், இணைய சேவையும் நிறுத்தப்பட்டுளளது. வன்முறை காரணமாக வங்கதேசத்தில் இன்று முதல் 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், சமையல் ஏரிவாயு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையால் சுமார் 97 பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

போராட்டத்திற்கு காரணம் என்ன?

இட ஒதுக்கீடு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு நீதி வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அங்கு வன்முறை வெடித்ததற்கு காரணமாக இருக்கிறது.  இதுகுறித்து பிரதமர் ஷேக் ஹசீனா கூறுகையில், “போராட்டம் என்ற பெயரில் மோசமான வேலைகளில் ஈடுபடுவோர் மாணவர்கள் அல்லர். அவர்கள் பயங்கரவாதிகள். அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Also Read: அமோக ஆதரவு.. ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வானார் கமலா ஹாரிஸ்!

இந்தியர்களுக்கு எச்சரிக்கை:

இதனிடையே வங்கதேசத்தில் இருக்கும் இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “தற்போது வங்க தேசத்தில் இருக்கும் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்தியர்கள் மறு அறிவிப்பு வரும் வரை வங்கதேசத்திற்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். தற்போது வங்க தேசத்தில் இருக்கும் இந்தியர்கள் தீவிர எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அவசரம் என்றால் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். டாக்காவில் உள்ள இந்தியா தூதரகத்தை +8801958383679, +8801958383680 மற்றும் +8801937400591 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version