Bangladesh Protest: கலவர பூமியான வங்கதேசம்.. கண்டதும் சுட உத்தரவிட்ட அரசு.. - Tamil News | | TV9 Tamil

Bangladesh Protest: கலவர பூமியான வங்கதேசம்.. கண்டதும் சுட உத்தரவிட்ட அரசு..

Published: 

21 Jul 2024 08:26 AM

இட ஒதுக்கீடு பாரபட்சமானது என்றும், தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் மாணவர்கள் போராடி வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இட ஒதுக்கீடு காரணமாக அங்கு வெடித்துள்ள போராட்டத்தில் இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

Bangladesh Protest: கலவர பூமியான வங்கதேசம்.. கண்டதும் சுட உத்தரவிட்ட அரசு..

வங்கதேச போராட்டம்

Follow Us On

வங்கதேச போராட்டம்: வங்க தேசத்தில் கடந்த 1971 ஆம் ஆண்டு நாட்டின் விடுதலைக்காக போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினர் மற்றும் சில குறிப்பிட்ட குழுக்களுக்கு அரசு வேலைவாப்புகளில் பாதிக்கும் அதிகமான இட ஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த இட ஒதுக்கீடு பாரபட்சமானது என்றும், தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் மாணவர்கள் போராடி வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இட ஒதுக்கீடு காரணமாக அங்கு வெடித்துள்ள போராட்டத்தில் இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் கடந்த ஜுலை 18 ஆம் தேதி, அரசு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தீ வைத்து கொலுத்தியதை தொடர்ந்து அங்கு போராட்டம் தீவிரமடைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக டாங்காவிற்கு வந்து செல்லும் மெட்ரோ ரயில் சேவையை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். அதுமட்டுமன்றி மொபைல் இணைய சேவை தடை செய்யப்பட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. கலவர பூமியாக காட்சியளிக்கும் வங்கதேசத்தில் ஞாயிற்றுகிழமை வரை அதாவது இன்று வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டது சுட அந்த அரசு உத்தரவிட்டுள்ளது.

Also Read:  உ.பியில் தொடரும் ரயில் விபத்துக்கள்.. 7 பெட்டிகள் தடம்புரண்டு கோர விபத்து..!

இப்படிப்பட்ட சூழலில் அங்கு வசிக்கும் 15,000 இந்தியர்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், 8,500 மாணவர்கள் உட்பட 15,000 இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து 88 இந்தியர்கள் மேகாலயா வழியாக திரும்பினர். வெள்ளிக்கிழமை, இந்தியர்கள் மற்றும் நேபாளர்கள் உட்பட 363 பேர் மேகாலயாவின் டாவ்கி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி வழியாக திரும்பினர்.

மேலும் தற்போது வரை ஆயிரம் மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளதாகவும், 4000 பேருக்கு உதவி செய்துள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தின் மத்திய வங்கி, பிரதமர் அலுவலகம், காவல் அலுவலக இணையதளங்கள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் இணையம் மற்றும் மொபைல் சேவைகள் தடைசெய்யப்பட்டதன் மூலம் ஆன்லைன் தகவல்தொடர்புகள் வியாழக்கிழமை முதல் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன. பல்வேறு தொலைக்காட்சி செய்தி சேனல்களும் ஒளிபரப்பாகவில்லை. தொடர் போராட்டம் காரணமாக வங்கதேச அரசு வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்துள்ளது.

Also Read: நொடி பொழுதில் இடிந்து விழுந்து தரைமட்டமான கட்டடம்.. அதிர்சியூட்டும் சிசிடிவி காட்சி!

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version